மெட்ரோ ரெயில் பார்க்கிங்குகளை பயன்படுத்த வேண்டாம் ... ... புயல் நாளை கரை கடக்கிறது.. பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்

மெட்ரோ ரெயில் பார்க்கிங்குகளை பயன்படுத்த வேண்டாம்

சென்னை அரும்பாக்கம், செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ நிலையங்களில் உள்ள பார்க்கிங்குகளை பயன்படுத்த வேண்டாம் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை வரை தாழ்வான மற்றும் நீர் தேங்கும் மெட்ரோ பார்க்கிங்குகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை மெட்ரோ ரெயில் சேவை வழக்கம்போல தொடரும் என்பதால் பயணம் மேற்கொள்வதில் எந்த சிக்கலும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2024-11-29 12:11 GMT

Linked news