சென்னைக்கு ரெட் அலர்ட் ஏன்? - பாலச்சந்திரன்... ... சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கான 'ரெட் அலர்ட்' வாபஸ் - வானிலை மையம்
சென்னைக்கு ரெட் அலர்ட் ஏன்? - பாலச்சந்திரன் விளக்கம்
சென்னையில் அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால்தான் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலெர்ட் என்றால் எல்லா இடங்களிலும் 20 செ.மீ அளவுக்கு மேல் கனமழை பெய்யும் என்று அர்த்தம் இல்லை. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் வலு இழக்கவில்லை. எனவே கரையைக் கடக்கும் போது ஓரிரு இடங்களில் கனமழை இருக்கலாம். ஏற்கெனவே பெய்த மழையின் அளவு, காற்றின் வேகத்தை பொறுத்தே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்று பாலச்சந்திரன் கூறினார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற பல கட்டங்கள் உள்ளன. புயலாக மாறுமா என்பதை இப்போது கணிக்க முடியாது என்று பாலச்சந்திரன் கூறினார்.
Update: 2024-10-16 11:41 GMT