இலங்கை அதிபர் தேர்தல்: அதிரடியாக மாறும் முன்னிலை... ... இலங்கை அதிபர் தேர்தலில் 42.31 சதவீத வாக்குகளுடன் அனுரா குமார திசநாயகே வெற்றி; நாளை பதவியேற்பு

இலங்கை அதிபர் தேர்தல்: அதிரடியாக மாறும் முன்னிலை நிலவரம்

இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே முன்னிலை வகித்து வருகிறார். பிரதான போட்டியாளர்களான தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோரைக் காட்டிலும் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அனுரா குமார திசநாயகே முன்னணியில் உள்ளார்

தபால் வாக்குகளில் தொடங்கி, இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் வரையிலும் அனுரா குமார திசநாயகேவே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். தொடக்கத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றிருந்த திசநாயகேவின் வாக்கு சதவீதம் அடுத்தடுத்த கட்டங்களில் படிப்படியாக குறைந்தது. 

இந்நிலையில் இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை நிலவரம் அதிரடியாக மாறி வருகிறது.

இதன்படி இலங்கை அதிபர் தேர்தலில் அனுரா குமரா திசநாயகேவின் வாக்கு சதவீதம் 50 சதவீதத்தில் இருந்து தற்போது 40 சதவீதமாக சரிந்துள்ளது.

இரண்டாவது இடத்தில் உள்ள சஜித் பிரேமதாசாவின் வாக்கு சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரணில் விக்கிரமசிங்கே மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார்.

தற்போதைய நிலையே நீடித்தால் முதல் இரண்டு இடங்களில் இருப்பவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள்.

இந்த தேர்தலில் 50 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பெற்றால் மட்டுமே ஒருவரால் இலங்கை அதிபராக முடியும் என்று கூறப்படுகிறது.

இலங்கை தேர்தலில் ராஜபக்சே கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன்படி நமல் ராஜபக்சே 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

முன்னணி நிலவரம்:-

அனுரா குமார திசநாயகே (தே.ம.ச.) - 22,37,983 வாக்குகள் ( 39.85 சதவீதம்)

சஜித் பிரேமதாசா (ஐ.ம.ச.) - 18,83,429 வாக்குகள் ( 33.54 சதவீதம்)

ரணில் விக்கிரமசிங்கே (சுயேச்சை) - 9,57,736 வாக்குகள் (17.32 சதவீதம்)

அரியநேந்திரன் (தமிழ் வேட்பாளர்) - 2,04,598 வாக்குகள் 

நமல் ராஜபக்சே (இ.பொ.ப.) - 1,30,134 வாக்குகள் 

திலகர் (தமிழ் வேட்பாளர்) - 760 வாக்குகள் 

Update: 2024-09-22 06:30 GMT

Linked news