புயல் முழுமையாக கரையை கடக்க சில மணி நேரங்கள்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது
புயல் முழுமையாக கரையை கடக்க சில மணி நேரங்கள் ஆகலாம் - பாலச்சந்திரன்
சென்னையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் புயல் உள்ளது. 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுவைக்கு அருகில் இன்று மாலை புயல் கரையை கடக்கிறது. கரைக்கு அருகே வரும்போது புயலின் நகர்வு வேகம் குறையும். புயல் முழுமையாக கரையை கடக்க சில மணி நேரங்கள் ஆகலாம். மயிலாடுதுறை முதல் திருவள்ளூர் வரை 90 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று அதி கனமழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், வேலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.' என்றார்.