அரியானாவில் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி... ... தேர்தல் முடிவுகள்.. அரியானாவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி, ஜம்மு காஷ்மீரை காங். கூட்டணி கைப்பற்றியது
அரியானாவில் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி பா.ஜ.க..
அரியானாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் காங்கிரசுக்கு சாதகமாக இருந்தன. பெரும்பாலான கணிப்புகளில், இரண்டு முறை ஆட்சியமைத்த பா.ஜ.க. இந்த முறை ஆட்சியை இழக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தன.
ஆனால், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி, பா.ஜ.க.வு.க்கு சாதகமான முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆட்சியமைக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில், தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 49 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய சூழ்நிலையை வைத்து பார்க்கையில் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி பா.ஜ.க. பயணிக்கிறது.
Update: 2024-10-08 07:58 GMT