உக்ரேனிய ஆற்றின் மீது பாலத்தை ரஷியா தகர்த்தது,... ... #லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனில் பொதுமக்கள் தஞ்சம் அடைந்துள்ள ரசாயன ஆலை மீது குண்டு வீச்சு


உக்ரேனிய ஆற்றின் மீது பாலத்தை ரஷியா தகர்த்தது, தப்பிக்கும் பாதையையும் துண்டித்தது

உக்ரேனிய நகரமான செவெரோடோனெட்ஸ்க் நகரை ஆற்றின் குறுக்கே உள்ள மற்றொரு நகரத்துடன் இணைக்கும் பாலத்தை ரஷியப் படைகள் தகர்த்து, பொதுமக்களை வெளியேற்றுவதற்கான சாத்தியமான வழியைத் துண்டித்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷியப் படைகள் நகரின் பெரும்பகுதியைக் கைப்பற்றியுள்ளன, ஆனால் ஒரு தொழில்துறை பகுதி மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்குமிடமாக இருக்கும் அசோட் இரசாயன ஆலை ஆகியவை உக்ரேனிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

ஆனால் ரஷியர்கள் சிவர்ஸ்கி டோனெட்ஸ் ஆற்றின் மீது ஒரு பாலத்தை அழித்துள்ளனர், இது செவெரோடோனெட்ஸ்கை அதன் இரட்டை நகரமான லிசிசான்ஸ்க் உடன் இணைக்கிறது என்று லுஹான்ஸ்க் கவர்னர் செர்ஹி கெய்டாய் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-12 23:41 GMT

Linked news