மீட்புப்பணியில் விமானப்படையின் 2 விமானங்கள் : கேரள... ... கேரளாவில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 123 ஆக உயர்வு - இரவிலும் தொடரும் மீட்பு பணிகள்
மீட்புப்பணியில் விமானப்படையின் 2 விமானங்கள் : கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தகவல்
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கேரள முதல்மந்திரி பினராயி விஜயன், “விமானப்படையின் 2 விமானங்கள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப்படையினர் இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். திருவனந்தபுரம், கோழிக்கோட்டில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
மண்ணில் புதைந்த உடல்களை கண்டறிய காவல்துறை மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வயநாடு, கோழிக்கோடு பகுதிகளில் இருந்து தடவியல் நிபுணர்கள் சென்றுள்ளனர். கோழிக்கோடு, கண்ணூர், திருச்சூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு மருத்துவ குழுக்கள் சென்றுள்ளன. போக்குவரத்துக்காக பாதிக்கப்பட்டுள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காயமடைந்த நபர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் சூழ்நிலையை உணர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியது அவசியம். அரசின் மீட்பு நடவடிக்கைகள் முழுமை அடைய பாதிக்கப்பட்ட மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.