வயநாடு: நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 80... ... கேரளாவில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 123 ஆக உயர்வு - இரவிலும் தொடரும் மீட்பு பணிகள்

வயநாடு: நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு

கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு மிகக் கனமழை பெய்தது. இந்த கனமழையை தொடர்ந்து அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் 80 பேர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கேரள தலைமைச் செயலாளர் வி.வேணு தெரிவித்தார்.

மேலும் 116 பேர் படுகாயங்களுடன் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மாநில வருவாய்த்துறை அமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே மத்திய இணை மந்திரி ஜார்ஜ் குரியன், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு தலைமை தாங்க வயநாடு செல்கிறார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் பேரில், தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள், துணை ராணுவப் படைகள், கேரள அரசு அதிகாரிகள் மற்றும் பிற நிறுவனங்களை மத்திய மந்திரி ஒருங்கிணைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2024-07-30 09:57 GMT

Linked news