எப்.ஐ.ஆர். வெளியிட்டவர் மீது நடவடிக்கை: சென்னை... ... 26-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
எப்.ஐ.ஆர். வெளியிட்டவர் மீது நடவடிக்கை: சென்னை காவல் ஆணையர் அருண் பேட்டி
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அந்த மாணவியின் விவரங்கள் அடங்கிய எப்.ஐ.ஆர். பகிரங்கமாக வெளியானது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாதிக்கப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே பதிவு செய்வதுதான் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்). தொழில்நுட்ப ரீதியாக இதுபோன்ற வழக்குகளில் எப்.ஐ.ஆர். பதிவானதும் லாக் ஆகிவிடும். இந்த வழக்கில் எப்.ஐ.ஆர். லாக் ஆவதில் தாமதம் ஆனது.
எப்.ஐ.ஆரை வெளியிடுவது மிகப்பெரிய குற்றம். வெளியிட்டவரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது திருட்டு உள்ளிட்ட 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.