பிரதமர் மோடி குவைத்திற்கு இன்று புறப்பட்டு... ... 21-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
பிரதமர் மோடி குவைத்திற்கு இன்று புறப்பட்டு சென்றுள்ளார். அவருடைய இந்த 2 நாள் பயணத்தில், குவைத்தில், முன்னாள் ஐ.எப்.எஸ். அதிகாரியான 101 வயதுடைய மங்கள் செயின் ஹண்டாவை, பிரதமர் மோடி இன்று நேரில் சந்தித்து பேச இருக்கிறார்.
இதுபற்றி ஹண்டா செய்தியாளர்களிடம் கூறும்போது, நான் இதற்கு முன்பே கூட அவரை சந்தித்து இருப்பேன் என உறுதியாக கூற முடியும் என்றார். இந்த சந்திப்பு பற்றி ஹண்டாவின் மகன் திலீப் ஹண்டா கூறும்போது, நான் குவைத்தில் 50 ஆண்டுகளாக வசித்து வருகிறேன்.
நாங்கள் அனைவரும் உற்சாகமடைந்து இருக்கிறோம். குறிப்பிடும்படியாக, என்னுடைய தந்தை பிரதமர் மோடியை நிறைய விரும்புகிறார். பிரதமர் மோடி, உலக அளவில் இந்தியாவை பெருமையடைய செய்து வருகிறார் என்று அவர் எப்போதும் கூறி வருவார் என்று திலீப் கூறியுள்ளார்.
Update: 2024-12-21 09:25 GMT