தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை... இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2024-09-09 04:51 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தங்கம் விலை கடந்த ஜூலை மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இந்த நிலையில் 2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து, அதன் விலையும் மளமளவென சரிந்தது. விலை குறைந்து கொண்டே வந்து, ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. இதனால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.53 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனையானது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.6,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்