தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம் என தகவல்

நாடாளுமன்ற தேர்தல் தேதி நடைபெறும் தேதியை நாளை பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.

Update: 2024-03-15 06:58 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வருகிறது. தேர்தல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான வேலைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என நாள்தோறும் செய்திகளில் பார்த்து வந்தோம். அதே போல தேர்தல் நடத்துவதற்கும் தீவிரமான வேலைகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து செய்து வந்தது.

இந்த நிலையில், தேர்தல் தேதி நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் கடந்த முறையை போலவே 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரே கட்டமாக நடைபெறும் எனத் தெரிகிறது.

மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் மற்றும் தமிழ்நாட்டில் விளவங்கோடு உள்பட சில மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்துவது குறித்தும் அறிவிப்பு வெளியாக உள்ளது. பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் 7 கட்டமாக நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்