உத்தரபிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து: 4 பேர் பலி

உத்தர பிரதேசத்தில் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

Update: 2024-07-18 10:12 GMT

லக்னோ, 

சண்டிகரில் இருந்து அசாமின் திப்ரூகர் செல்லும் சண்டிகர்- திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று பிற்பகல் 2 மணியளவில் உத்தரப்பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதிகஞ்ச் ஜிலாகி என்ற இடத்தில் தடம் புரண்டது. ரெயிலின் 10 முதல் 12 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. இதில் 4 ஏசி பெட்டிகளும் அடங்கும். இந்த ரெயில் பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் இடிபாடுகளிடையே சிக்கிக் கொண்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்புப் படையினர் விரைந்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கு மீட்பு பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விபத்தில்  4 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 60பயணிகள் காயம் அடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Full View


Tags:    

மேலும் செய்திகள்