புதிய வண்ணத்தில் யமஹா எப்.இஸட். எஸ் எப் 1 வி 4

யமஹா மாடல் மோட்டார் சைக்கிளில் எப்.இஸட்.எஸ். மாடல் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு புதிய வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.

Update: 2023-10-11 09:16 GMT

இளைஞர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ள யமஹா மாடல் மோட்டார் சைக்கிளில் எப்.இஸட்.எஸ். மாடல் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு புதிய வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1,28,900. கருமையான மேட் நீல நிறம் மற்றும் மேட் கருப்பு நிறங்களில் வந்துள்ளது. இப்புதிய வண்ணங்களால் வாகன விற்பனை அதிகரிக்கும் என்று இந்நிறுவனம் நம்புகிறது.

149 சி.சி. திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் என்ஜின் 12.4 பி.எஸ். திறனை 7,250 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 13.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 5,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். புளூடூத் இணைப்பு, முன்சக்கரத்திற்கு டிஸ்க் பிரேக் வசதியுடன் வந்துள்ளது. பன்முக செயல்பாடுகளைக் கொண்ட எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்.இ.டி. முகப்பு விளக்கு, என்ஜின் பாதுகாப்புக் கவசம் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்களாகும். யமஹாவின் ஒய் கனெக்ட் செயலி கூடுதல் செயல்பாடுகளுக்கு வழிவகுக்கிறது. ஏற்கனவே மெட்டாலிக் கிரே, மெஜஸ்டிக் சிவப்பு, மெட்டாலிக் கருப்பு வண்ணங்களில் காணப்படும் இந்த மோட்டார் சைக்கிள் தற்போது கூடுத லாக இரண்டு வண்ணங் களில் வந்துள்ளதால் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்