ஆக்டிவா லிமிடெட் எடிஷன்

ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் கருப்பு நிற மெட்டாலிக் மற்றும் நீல நிற வண்ணங்களில் ஆக்டிவா லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2023-10-12 14:19 IST

இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஜப்பானின் ஹோண்டா நிறுவனத் தயாரிப்புகளில் பொதுமக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற மாடல் ஆக்டிவா. இந்த மாடலில் தற்போது கருப்பு நிற மெட்டாலிக் மற்றும் நீல நிற வண்ணங்களில் லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டர்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக சுமார் விலை ரூ.80,734.

பிற வண்ணத்தை பளிச்சென எடுத்துக்காட்டும் வகையில் கருப்பு நிற பாகங்கள், குரோமியம் பகுதிகள் மற்றும் வண்ண ஸ்டிரிப்புகள் இடம்பெற்றுள்ளன. மேலும் ஆக்டிவா லோகோ முப்பரிமாணத்தில் தெரியும் வகையில் பதிக்கப்பட்டுள்ளது.

இது 109.51 சி.சி. திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. பாரத் புகைவிதி – 6-க்கு ஏற்ற வகையில் தயாரிக்கப் பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டர் ஸ்மார்ட் சாவி வசதியுடன் 5.77 கிலோவாட் திறனையும், 8.90 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியதாக வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்