டி.வி.எஸ். எக்ஸ் பேட்டரி ஸ்கூட்டர் அறிமுகம்

Update:2023-08-30 11:45 IST

இரு சக்கர வாகனத் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் டி.வி.எஸ். நிறுவனம் புதிதாக டி.வி.எஸ். எக்ஸ் என்ற பெயரிலான பேட்டரி ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 105 கி.மீ ஆகும். இதில் 4.4 கிலோவாட் அவர் பேட்டரி பயன்படுத்தப் பட்டுள்ளது. இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 140 கி.மீ. தூரம் வரை ஓடும்.

டெலஸ்கோப்பிக் பிரேம் முன்புறமும், பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பரும் பயன்படுத்தப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள மின் இணைப்பு மூலம் சார்ஜ் செய்ய வசதியாக ஸ்மார்ட் எக்ஸ் ரேபிட் சார்ஜரை இந்நிறுவனம் அளிக்கிறது. இதில் 50 சதவீதம் 50 நிமிடத்தில் சார்ஜ் ஆகிவிடும். 950 வாட் போர்ட்டபிள் சார்ஜர் மூலம் நான்கரை மணி நேரத்தில் சார்ஜ் செய்ய முடியும். ஏ.பி.எஸ். வசதி கொண்ட முதலாவது பேட்டரி ஸ்கூட்டர் இதுவாகும். 2.6 விநாடிகளில் 40 கி.மீ. வேகத்தை எட்டிவிடும் வகையில் இதில் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளில் மூன்று விதமான ஓட்டும் நிலைகள் (எக்ஸ் டீல்த், எக்ஸ் டிரைடு, எக்ஸோனிக்) உள்ளன. இதில் 10.25 அங்குல டி.எப்.டி. திரை உள்ளது. இது ஓட்டுபவரின் வசதிக் கேற்ப சாய்த்துக் கொள்ளும் வசதியிலான வடி வமைப்பு, குரூயிஸ் கண்ட்ரோல், புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. இதன் விற்பனையக விலை ரூ.2.5 லட்சம். தற்போதைக்கு அதிக விலை கொண்ட பேட்டரி ஸ்கூட்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்