புதிய ரேஞ்ச் ரோவர் வெலார்

Update: 2023-09-20 08:40 GMT

பிரீமியம் கார்களில் ரேஞ்ச் ரோவர் தயாரிப்புகள் சிறப்பிடம் பெற்றவை. இவற்றில் வெலார் மாடல் பல மேம்பட்ட அம்சங்கள் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2 லிட்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்டதாக 250 பி.எஸ். திறனையும், 365 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் வகையிலும் வந்துள்ளது. இதில் டீசல் மாடல் 203 பி.எஸ். திறனையும், 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது. இதன் விலை சுமார் ரூ.94.3 லட்சம். முப்பரிமாண தோற்றத்தைக் கொண்ட எல்.இ.டி. விளக்குகள் மிக அழகுற வடிவமைக்கப்பட்டு இடம்பெற்றுள்ளன.


இதில் 11.4 அங்குல தொடுதிரை, கிளைமேட் கண்ட்ரோல், இருக்கை அட்ஜெஸ்ட்மென்ட், நேவிகேஷன், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. பி.வி. புரோ என்னும் அடுத்த தலைமுறை இன்போடெயின் மென்ட் சிஸ்டம் பயணத்தை இனிமையானதாக்க உதவுகிறது. வயர்லெஸ் அடிப்படையில் வாகனத்தின் சாப்ட்வேர் செயல்படும் வகையிலும், பயணிப்பவர் பயண களைப்பு, சாலையின் சுற்றுப்புற இரைச்சல் முற்றிலுமாக தெரியாத வகையிலும் வடிவமைக்கப் பட்டுள்ளது.


உள்புறம் காற்றை சுத்திகரிக்கும் வகையில் ஏர் பியூரிபயர் உள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள நானோ எக்ஸ் தொழில்நுட்பம் காரினுள் துர்நாற்றம் வீசாமல் தடுக்கவும், பாக்டீரியா, ஒவ்வாமை ஏற்படுத்தும் கிருமிகள் உருவாவதை தடுக்கவும் உதவுகிறது. உள்புறம் 30 வண்ணத்தில் விளக்குகளை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி உள்ளது. அத்துடன் தங்களுக்கு இதமான குளிர் நிலையை தேர்வு செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்