ஸ்லாவியா அனிவர்சரி எடிஷன்

பிரீமியம் கார்கள் தயாரிப்பில் பிரபலமாகத் திகழும் ஸ்கோடா நிறுவனத்தின் ஸ்லாவியா மாடல் கார் மிகுந்த வரவேற்பைப் பெற்றதாகும்.;

Update: 2023-04-28 13:00 GMT

கார் அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டாவதைக் கொண்டாடும் வகையில் அனிவர்சரி எடிஷனை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. செடான் பிரிவைச் சேர்ந்த இந்த மாடலில் 1.5 டி.எஸ்.ஐ. என்ஜின் உள்ளது. இதில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கியர் வசதி கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.17,27,999. ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.18,67,999.

முன்புறம் குரோமியத்தாலான கிரில்லை கொண்டுள்ளது. ஸ்டீயரிங் சக்கரத்தில் அனிவர்சரி எடிஷனைக் குறிக்கும் விதமாக பேட்ஜ் இடம்பெற்றுள்ளது. டேஷ் போர்டில் 25.4 செ.மீ. அளவிலான ஸ்கோடா இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஸ்கோடா செயலி மற்றும் வயர்லெஸ் ஸ்மார்ட் லிங்க் மூலம் கூடுதல் வசதிகளைப் பெறலாம். இனிய இசையை வழங்க 380 வாட் திறன் உள்ள ஆடியோ சிஸ்டம் உள்ளது. உயர் தரத்திலான மேட் மற்றும் மிருதுவான தலையணைகள் உள்ளன. எத்தனால் கலப்பு பெட்ரோலை உபயோகிக்கும் வகையிலான என்ஜின் உள்ளது. இதனால் எரிபொருள் சிக்கனமாக செலவிடப் படுவதோடு சுற்றுச் சூழல் பாதிப்பும் குறைவாக இருக்கும். மேனுவல் மாடல் 6 கியர்களையும், ஆட்டோமேடிக் கியர் மாடல் 7 கியர்களையும் கொண்டிருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்