நிசான் நிறுவனம் தனது மேக்னைட் மாடலில் கெஸா என்ற பெயரில் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இதில் உயர் தரத்திலான ஆடியோ மற்றும் இன்போடெயின் மென்ட் சிஸ்டம், அதிக ரெசல்யூஷனைக் கொண்ட 9 அங்குல அளவிலான தொடு திரை உள்ளது.
ஆண்ட்ராய்டு கார் பிளே செயலி வயர்லெஸ் இணைப்பு வசதியும், இனிய இசையை வழங்க ஜே.பி.எல். ஸ்பீக்கர்களும் உள்ளன. காரை ரிவர்ஸ் எடுக்கும்போது பின்புறம் தெளிவாகத் தெரிவதற்கென கேமராக்கள் உள்ளன. 7 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. வெளியிலிருந்து இயக்க வசதியாக சுறாமீன் துடுப்பு போன்ற ஆன்டெனா மிக அழகாக உள்ளது. வாகனத்திற்கு அழகு சேர்க்க பீஜ் நிறத்திலான மென்மையான இருக்கைகள் உள்ளன. சர்வதேச மோதல் சோதனையில் இந்த கார் நான்கு நட்சத்திர தரத்தை பெற்றுள்ளது. இந்த பிரிவில் அதிகபட்ச பாதுகாப்பு வாகனமாக இது கருதப்படுகிறது.
அத்துடன் பாரத் புகைவிதி 6-ல் இரண்டாம் கட்ட தரச்சோதனை விதிகளைப் பூர்த்தி செய்யும் என்ஜின் இதில் உள்ளது. எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிடி புரோகிராம், டிராக்ஷன் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டயரின் காற்று அளவைக் கண்காணிக்கும் அமைப்பு உள்ளிட்ட வசதிகள் இதில் உள்ளன. ஒரு லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினைக் கொண்டது.
இது 72 பி.எஸ். திறனையும், 96 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். 5 ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்டது.