நெக்சான் இ.வி. அறிமுகம்

இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்ற பேட்டரி வாகனத் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரபலமான நெக்சான் மாடலில் நெக்சான் இ.வி. பேட்டரி காரை அறிமுகம் செய்துள்ளது.;

Update: 2023-10-04 08:39 GMT

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.14.74 லட்சத்திலிருந்து ஆரம்பமாகிறது. ஓட்டுபவர்களுக்கு மிகச் சிறந்த அனுபவத்தை அளிக்கும் வகையில் 12.3 அங்குல அகலம் கொண்ட தொடு திரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இனிய இசையை வழங்க ஹர்மான் ஆடியோ சிஸ்டத்துடன் கூடிய 9 ஜே.பி.எல். ஸ்பீக்கர்கள் உள்ளன. இத்துடன் 10.25 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது.

குரல் வழிக்கட்டுப்பாட்டில் செயல்படும் வகையில் எளிதான இணைப்பை வழங்க டாடா இஸட் செயலி கார் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 60-க்கும் மேற்பட்ட கார் கட்டுப்பாட்டு வசதிகளைப் பெற முடியும். இதில் உள்ள பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 465 கி.மீ. தூரம் வரை ஓடும் திறன் கொண்டது. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய 6 ஏர் பேக்குகள் மற்றும் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் வசதியும் உள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள விஎல் தொழில்நுட்பம் காரினுள் உள்ள சார்ஜர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்குத் தேவையான மின்சாரம் தொடர்ந்து கிடைக்க வழிவகை செய்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்