எம்.ஜி. குளோஸ்டர் பிளாக்ஸ்டார்ம் எடிஷன்
எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் குளோஸ்டர் எஸ்.யு.வி. மாடலில் பிளாக்ஸ்டார்ம் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
இதன் விற்பனையக விலை சுமார் ரூ.40.30 லட்சம். இதன் நீளம் 4,985 மீ.மீ., அகலம் 1,926 மி.மீ., உயரம் 1,867 மி.மீ. ஆகும். இதில் கருப்பு மற்றும் கிரே வண்ணங்கள் வந்துள்ளன. மேற்கூரை முழுவதும் கருப்பு நிறத்திலானது.
ரூப் ரெயில்ஸ், பின்புற விளக்கு மற்றும் முகப்பு விளக்கை சுற்றியுள்ள பகுதிகள், ஜன்னலை சுற்றியுள்ள பகுதி உள்ளிட்ட அனைத்தும் கருப்பு வண்ணத்தில் இருக்கும். அலாய் சக்கரமும் கருப்பு நிறத்தில் மேலும் அழகு சேர்க்கிறது. உள்பகுதியில் சிவப்பு நிறம் சேர்க்கப்பட்டுள்ளது.
ஸ்டீயரிங் மற்றும் டேஷ்போர்டு சிவப்பு வண்ணத்தில் உள்ளது. 12 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான டிரைவர் இருக்கை, 8 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பயணிகள் இருக்கை, லேன் மாறுவதற்கு உதவி மற்றும் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் வசதி கொண்டது. 6 பேர் மற்றும் 7 பேர் பயணிக்கும் வகையில் இருக்கை வசதி அமையப் பெற்றது. 163 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும் 2 லிட்டர் டர்போ டீசல் என்ஜினைக் கொண்டது.
இதில் நான்கு சக்கர சுழற்சி கொண்ட மாடல் 218 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தக் கூடியது. 8 கியர் கொண்டது. 4 சக்கர சுழற்சி கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.43.08 லட்சம்.