மெர்சிடஸ் இ.கியூ.இ 500 பேட்டரி எஸ்.யு.வி.

சொகுசு மற்றும் பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தற்போது சுற்றுச் சூழலுக்கு ஏற்ற பேட்டரி வாகனத் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. இதில் முதலாவதாக இ.கியூ.இ 500 என்ற பெயரிலான பேட்டரி எஸ்.யு.வி. காரை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2023-10-04 14:05 IST

சொகுசு வாகனப் பிரிவில் பேட்டரியில் இயங்கும் எஸ்.யு.வி.யை இந்நிறுவனம் சர்வதேச அளவில் அறிமுகம் செய்துள்ளது. அதிக இடவசதி கொண்ட சொகுசு காராக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் எம்.பி.யு.எக்ஸ். ஹைபர் தொடு திரை உள்ளது. அத்துடன் 15 ஸ்பீக்கர்களைக் கொண்ட பர்மெஸ்டர் முப்பரிமாண சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், காரினுள் தூய்மையான காற்றுக்கு ஹெப்பா வடிகட்டி, களைப்பு தெரியாமலிருக்க முன்புறம் மசாஜ் இருக்கைகள் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்களாகும்.

இதில் 90.56 கிலோவாட் அவர் பேட்டரி பயன்படுத்தப் பட்டுள்ளது. இது 300 கிலோவாட் திறனை வெளிப்படுத்துவதோடு 858 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளியிடும். இதை ஸ்டார்ட் செய்த 4.9 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 210 கி.மீ. இதில் உள்ள பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 550 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம்.

நாடு முழுவதும் 140-க்கும் மேற்பட்ட சார்ஜிங் மையங்களை பென்ஸ் வைத்துள்ளது. பென்ஸ் கார்கள் மட்டுமின்றி பிற நிறுவனத் தயாரிப்பு கார்களையும் இங்கு சார்ஜ் செய்யும் வசதியை இந்நிறுவனம் அளிக்கிறது. இதன் விலை சுமார் ரூ.1.39 கோடி.

Tags:    

மேலும் செய்திகள்