மெர்சிடஸ் பென்ஸ் ஜி.எல்.சி. அறிமுகம்

Update: 2023-08-16 10:28 GMT

சொகுசு கார்களைத் தயாரிக்கும்மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம்மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் புதிதாக ஜி.எல்.சி. மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. இப்பிரிவில் இது முதல் தலைமுறையைச் சேர்ந்த மாடலாகும். இதில் ஜி.எல்.சி 300 (பெட்ரோல்) மற்றும் ஜி.எல்.சி. 220 டி (டீசல்) என இரண்டு மாடல்கள் வந்துள்ளன. இதன் முன்புற கிரில் அளவு வழக்கமான மாடல்களைக் காட்டிலும் சற்று பெரிய அளவில் வடி வமைக்கப்பட்டுள்ளது. முன்புற முகப்பு விளக்கின் வடிவம் முழுவதும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது 1991 சி.சி. திறன் கொண்ட 4 சிலிண்டர் என்ஜினைக் கொண்டது.

6,100 ஆர்.பி.எம். சுழற்சியில் 254 பி.ஹெச்.பி. திறனையும், 4 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையையும் வெளிப்படுத்தும். ஆட்டோ மேடிக் கியர் வசதி கொண்டது.

இந்த காரை ஸ்டார்ட் செய்த 6.3 விநாடிகளில் 100 கி.மீ வேகத்தைத் தொட்டுவிடும். மணிக்கு 240 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. காரின் நீளம் 4,731 மி.மீ., அகலம் 1,890 மி.மீ., உயரம் 1,644 மி.மீ.5 பேர் சவுகரியமாக பயணிக்கும் வசதி கொண்டது.

பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ஏர் பேக் வசதியும் உள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.73.50 லட்சம்.

Tags:    

மேலும் செய்திகள்