மெர்சிடஸ் ஏ.எம்.ஜி. எஸ்.எல் 55 ரோட்ஸ்டெர் அறிமுகம்

Update:2023-07-05 12:07 IST

பிரீமியம் மற்றும் சொகுசுக் கார்களைத் தயாரிக்கும் ஜெர்மனியின் மெர்சிடஸ் நிறுவனம் புதிதாக ஏ.எம்.ஜி. எஸ்.எல் 55 ரோட்ஸ்டெர் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.2.35 கோடி. ஏ.எம்.ஜி. வரிசையில் இந்தக் கார் 7-வது தலைமுறை மாடலாகும். இந்தக் காரில் 4 லிட்டர் பை டர்போ வி 8 என்ஜின் உள்ளது. 476 பி.ஹெச்.பி. திறனை இது வெளிப்படுத்தும்.

நீண்ட பானெட்டை உடையதாக இந்தக் கார் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் 20 அங்குல சக்கரம் மற்றும் பேப்ரிக்கால் ஆன மேற்கூரை உள்ளது. இதை தேவைக்கேற்ப திறந்து, மூடிக்கொள்ளலாம். இந்தக் கார் 4,705 மி.மீ. நீளம், 1,359 மி.மீ. உயரம், 1,915 மி.மீ. அகலம் கொண்டது. 9 ஆட்டோமேடிக் கியர்களுடன் நான்கு சக்கர சுழற்சி கொண்டதாக உருவாக்கப் பட்டுள்ளது.

இந்தக் காரை ஸ்டார்ட் செய்த 3.9 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 295 கி.மீ. ஆகும். டேஷ் போர்டு பகுதியில் 11.9 அங்குல இன்போடெயின்மென்ட் சிஸ்டமும், டிரைவருக்கு உதவ 12.3 அங்குல திரையும், இனிய இசையை வழங்க பர்ம்ஸ்டெர் ஆடியோ சிஸ்டமும் இடம் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்