மாருதி டூர் ஹெச் 1 -அறிமுகம்
இந்தியாவில் அதிக அளவில் கார் களை உற்பத்தி செய்யும் மாருதி சுஸுகி நிறுவனம் புதிய காரை அறிமுகம் செய்துள்ளது .;
இந்தியாவில் அதிக அளவில் கார் களை உற்பத்தி செய்யும் மாருதி சுஸுகி நிறுவனம் புதிதாக மாருதி டூர் ஹெச் 1 என்ற பெயரிலான காரை அறிமுகம் செய்துள்ளது. ஆல்டோ கே 10 மாடலின் பல அடிப்படை அம்சங்களை பிரதானமாகக் கொண்டு இந்த கார் வடிவ மைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஒரு லிட்டர் கே சீரிஸ் டியூயல் ஜெட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோலில் இயங்கும் கார் 65 பி.ஹெச்.பி. திறனை 5,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 89 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 3,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். சி.என்.ஜி. மாடலில் இயங்கும் கார் 55 பி.ஹெச்.பி. திறனையும், 82.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். ஆலையிலேயே சி.என்.ஜி. டேங்க் பொருத்தப்பட்டு மிகவும் பாதுகாப்பான காராக வந்துள்ளது. சோதனை ஓட்டத்தில் பெட்ரோல் மாடல் 1 லிட்டருக்கு 24.06 கி.மீ. தூரம், சி.என்.ஜி. மாடல் 1 கிலோவுக்கு 34.46 கி.மீ. தூரம் ஓடியுள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கி.மீ. ஆகும். பாதுகாப்பு அம்சமாக இரண்டு ஏர் பேக்கு களைக் கொண்டதாக இது வந்துள்ளது. ஏ.பி.எஸ்., இ.பி.டி. உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது. சீட் பெல்ட் அறிவுறுத்தல் வசதி கொண்டது. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் மற்றும் என்ஜின் இம்மொபிலைஸர் உள்ளது. கிரே, சில்வர், வெள்ளை உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் இது வந்துள்ளது. பெட்ரோல் மாடலின் விலை சுமார் ரூ.4.80 லட்சம்.
சி.என்.ஜி.யில் இயங்கும் மாடலின் விலை சுமார் ரூ.5.70 லட்சம்.