ஜீப் மெரிடியன் அப்லாண்ட், மெரிடியன் எக்ஸ் ஸ்பெஷல் எடிஷன்
பிரீமியம் எஸ்.யு.வி. கார்களைத் தயாரிக்கும் ஜீப் நிறுவனம் தற்போது மெரிடியன் அப்லாண்ட் மற்றும் மெரிடியன் எக்ஸ் மாடல்களில் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.;
சாகசப் பயணங்களை மேற்கொள்வோருக்காக இவ்விரு மாடல் களிலும் மேம்பட்ட அம்சங்கள் சேர்க்கப் பட்டுள்ளன. சில்வர் மற்றும் நீல நிறங்களில் இது வந்துள்ளது. இரண்டு மாடலுமே நான்கு சக்கர சுழற்சி கொண்டவை. கிரே நிறத்திலான மேற்கூரை பார்ப்பதற்கு அழகிய தோற்றத்தை அளிக்கிறது.
மேல் பகுதியில் பொருட்களை வைப்பதற்கேற்ப ரூப் கேரியர் வசதி அப்லாண்ட் மாடலில் உள்ளது. நினைத்த மாத்திரத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்ல விரும்புவோருக்கு ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சமதளம், சாலை, கரடு முரடான சாலை உள்ளிட்டவற்றில் செல்வதற்கு ஏற்ற வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் படிக்கட்டு வசதியும் இதில் உள்ளது. சேறு, சகதிகளைத் தடுக்கும் வகையிலான விசேஷ அமைப்புகள், சூரிய ஒளிக் கதிர் தடுப்பு ஷேட் வசதி, சிறப்பு கேபின், கார்கோ மேட், டயர் இன்பிளேட்டர் உள்ளிட்டவை இதில் உள்ளன.
பொழுதுபோக்கு அம்சத்திற்காக இரண்டு மாட லிலுமே 11.6 அங்குல வை-பை இணைப்பில் செயல்படும் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இதை ஸ்டார்ட் செய்த 10.8 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிடும் திறன் கொண்டது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 198 கி.மீ. ஆகும்.
இதன் விலை சுமார் ரூ.32.95 லட்சம் முதல் ஆரம்பமாகிறது.