மேம்படுத்தப்பட்ட ஹோண்டா லிவோ அறிமுகம்

Update: 2023-08-30 06:21 GMT

இருசக்கர வாகன உற்பத்தியில் பிரபலமாகத் திகழும் ஜப்பானின் ஹோண்டா நிறுவனத் தயாரிப்புகளில் லிவோ மாடல் மோட்டார் சைக்கிள் மிகவும் பிரபலமானது. இந்த மாடலில் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் புகுத்தப்பட்டு நகர்ப்புறத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 110 சி.சி. திறன் கொண்ட இந்த மோட்டார் சைக்கிளில் ஓ.பி.டி. 2 எனப்படும் புகைவிதிக்கேற்ற பி.ஜி.எம். எப்.ஐ. என்ஜின் மேம்படுத்தப்பட்ட திறனுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிக ஒளி வீசும் வகையிலான முகப்பு விளக்கு, இரவில் வாகனம் ஓட்டுவதை மிகவும் பாதுகாப்பானதாக ஆக்கியுள்ளது. இதில் டியூப்லெஸ் டயர், சி.பி.எஸ். எனப்படும் ஒருங்கிணைந்த பிரேக்கிங் வசதி மற்றும் இன்ஜினை ஸ்டார்ட் செய்யவும், ஆப் செய்யவும் ஒருங்கிணைந்த சுவிட்ச் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சவுகரியமான பயணத்திற்கேற்ற வகையிலான இருக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. 5 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் பின்புற சஸ்பென்ஷன் உள்ளது இதன் கூடுதல் சிறப் பாகும். வாகனத்தை சர்வீஸ் செய்வது குறித்த அறிவுறுத்தலை உரிய நேரத்தில் அளிக்கும். இந்த மோட்டார் சைக்கிளில் கிராபிக் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது இதற்கு மேலும் அழகு சேர்க்கிறது.

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.78,500.

டிஸ்க் பிரேக் உள்ள மாடல் விலை சுமார் ரூ.82,500.

Tags:    

மேலும் செய்திகள்