டிரையம்ப் நிறுவனம் புதிதாக டைகர் 900 அரகோன் எடிஷன் எனும் புதிய மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இப்புதிய மாடல் மோட்டார் சைக்கிள் 888 சி.சி. திறன் கொண்டது. 87 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 7,250 ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும்.
இதில் ஸ்லிப்அசிஸ்ட் கிளட்ச் வசதி உள்ளது. அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான மர்ஸோச்சி காட்ரிஜ் போர்க் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூன்று வண்ணங்களை ஒருங்கே கொண்டதாகவும், மூன்று சிலிண்டர்களோடு லிக்விட் கூல்டு என்ஜின் உள்ளதாகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 6 கியர்கள் உள்ளன. 93.9 பி.ஹெச்.பி. திறனை 8,750 ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும்.
இதன் விற்பனையக விலை சுமார் ரூ.17.57 லட்சம்.