ஆம்பியர் என் 8 பேட்டரி ஸ்கூட்டர் அறிமுகம்

Update:2023-08-09 13:30 IST

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த எனிக்மா ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் புதிதாக ஆம்பியர் என்ற 8 என்ற பெயரில் பேட்டரி ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1.10 லட்சம்.

கிரே, வெள்ளை, நீலம், கருப்பு மற்றும் சில்வர் நிறங்களில் இது வந்துள்ளது. 200 கிலோ எடையை இழுத்துச் செல்லும் திறன் மிக்க மோட்டார் இதில் உள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் 200 கி.மீ. தூரம் வரை ஓடும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 1,500 வாட் திறன் கொண்ட மோட்டார் பயன் படுத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 50 கி.மீ. ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்