மேம்படுத்தப்பட்ட நெக்ஸான்

Update: 2023-09-20 09:01 GMT

கார் தயாரிப்பில் முன்னிலையில் திகழும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்ஸான் மாடல் காரில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகம் செய்துள்ளது. 7 ஸ்பீடு கியர்களைக் கொண்ட இதில் டர்போ பெட்ரோல் என்ஜின் உள்ளது. 10.25 அங்குல தொடு திரை, டிஜிட்டல் இன்ஸ்ரூமென்ட் கிளஸ்டர், 360 டிகிரி சுழலும் கேமரா, இணைப்புக் கான கார் டெக் செயலி, வயர்லெஸ் சார்ஜர், காற்றோட்டமான முன் இருக்கை கள், ஏர் பியூரிபயர், குரல் வழிக் கட்டுப்பாட்டில் செயல்படும் மேற்கூரை உள்ளிட்ட பல சிறப்பு நுட்பங்கள் இதில் உள்ளன. இவற்றுடன் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிடி கண்ட்ரோல், மும்முனை இருக்கை பெல்ட், குழந்தைகள் பயணிக்க ஐ-சோபிக்ஸ் இருக்கை உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.

இந்தக் கார் 16 அங்குல அலாய் சக்கரத்தைக் கொண்டது. 120 ஹெச்.பி. திறனையும், 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உள்ளது. இந்த காரில் பாதுகாப்பான பயணத்திற்கு 6 ஏர் பேக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இதில் 1.5 லிட்டர் திறன் கொண்ட டீசல் என்ஜின் மாடலும் உள்ளது. இது 115 ஹெச்.பி. திறனையும், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையையும் வெளிப்படுத்தும். மேனுவல் மாடல் 5 கியர்களைக் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.8.10 லட்சம்.

Tags:    

மேலும் செய்திகள்