ஹோண்டா ஹார்னெட் 2.0 அறிமுகம்

Update: 2023-09-06 10:38 GMT

இரு சக்கர வாகனத் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் ஹார்னெட் 2.0 என்ற புதிய மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1,39,000. இளைஞர்களைக் கவரும் வகையில் புதிய கிராபிக் டிசைன், பெரிய அளவிலான பெட்ரோல் டேங்க், எல்.இ.டி. முகப்பு விளக்கு மற்றும் இன்டிகேட்டர் விளக்குகள் உள்ளன. சிறிய அளவிலான அழகிய மப்ளர், அலாய் சக்கரம், இரண்டு பேர் சவுகரியமாக பயணிக்கும் வகையிலான இருக்கை, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், புதிய அசிஸ்ட், ஸ்லிப்பர் கிளட்ச், டிஸ்க் பிரேக் மற்றும் ஏ.பி.எஸ். வசதிகளை இந்த மோட்டார் சைக்கிள் கொண்டுள்ளது.

184.40 சி.சி. திறன் கொண்ட 4 ஸ்டிரோக் என்ஜினையும் கொண்டது. ஒற்றை சிலிண்டருடன் பாரத் புகைவிதி-6-க்கு ஏற்ற வகையிலான பி.ஜி.எம். எப்.ஐ. என்ஜினைக் கொண்டுள்ளது. 200 சி.சி. திறன் கொண்ட மோட்டார் சைக்கிளில் முதல் முறையாக அப்-சைடு டவுன் (யு.எஸ்.டி.) போர்க்கை கொண்ட மாடலாக வந்துள்ளது.

காற்றைக் கிழித்து வேகமாகச் செல்லும் வகையில் ஏரோ-டைனமிக் வடிவமைப்புடன், எளிதில் கையாளும் வகையில் ஸ்திரமான வாகனமாக உருவாக்கப்பட்டுள்ளது. என்ஜின் செயல்பாட்டை நிறுத்தும் சுவிட்ச் வசதி, சைடு ஸ்டாண்ட் இன்டிகேட்டர், டியூப்லெஸ் டயர் ஆகியன இந்த மோட்டார் சைக்கிளில் உள்ள கூடுதல் சிறப்பம்சங்களாகும். இது 15.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது.

கருப்பு, சிவப்பு, நீலம், கிரே உள்ளிட்ட வண்ணங் களில் மெட்டாலிக் பெயிண்ட் பூச்சு உடையதாக இவை வந்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்