மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஹோண்டா டியோ

ஹோண்டா நிறுவனத் தயாரிப்புகளில் பிரபலமான டியோ மாடலின் மேம்படுத்தப்பட்ட தயாரிப்பு அறிமுகம்

Update: 2023-06-21 07:47 GMT

இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஜப்பானின் ஹோண்டா நிறுவனத் தயாரிப்புகளில் டியோ மாடல் மிகவும் பிரபலமானது. இதில் தற்போது ஓ.பி.டி 2 எனும் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட் சாவி சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 110 சி.சி. திறன் கொண்டது. இதில் முழுமையான டிஜிட்டல் மீட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய வடிவிலான லோகோ, கிராபிக்ஸ், அலாய் சக்கரம் வாகனத்திற்கு மேலும் அழகு சேர்க்கிறது. முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் சவுகரியமான பயணத்திற்கு வழிவகுக்கிறது. 3 வேரியன்ட்களில் (ஸ்டாண்டர்டு, டீலக்ஸ் மற்றும் ஸ்மார்ட்) வந்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.70,211 முதல் ஆரம்பமாகிறது.

இதில் உள்ள ஸ்மார்ட் சாவி மூலம் வாகன நிறுத்தங்களில் உங்கள் ஸ்கூட்டர் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தை எளிதில் கண்டுபிடிக்க முடியும். இதில் உள்ள பொத்தானை அழுத்தினால் ஸ்கூட்டரின் இண்டிகேட்டர் விளக்குகள் எரிந்து இருக்கு மிடத்தைக் காட்டிவிடும். வாகனத்தை தொலைதூரத்திலிருந்த படியே லாக் செய்யவும், திறக்கவும் முடியும். ஸ்மார்ட் சாவியிலிருந்து 20 விநாடிகளுக்கு எவ்வித சமிக்ஞையும் வராவிடில் தானியங்கி முறையில் ஸ்கூட்டர் செயல்பாடுகள் முழுவதும் முடங்கிவிடும். 2 மீட்டர் தூரத்திற்குள் வாகனத்தை இந்த சாவி மூலம் ஸ்டார்ட் செய்ய, ஆப் செய்ய முடியும். வாகனத்திற்கு உரிய சாவி போடாவிட்டால் இதில் உள்ள இம்மொபிலைஸர் சிஸ்டம் செயல்படாது. பாரத் புகை விதி 6-க்கு ஏற்ப (ஓ.பி.டி2) வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிர்வுகள் ஏற்படாத வகையில் ஸ்டார்ட் ஆகும் ஹோண்டா ஏ.சி.ஜி. ஸ்டார்ட்டரும் இதில் இடம்பெற்றுள்ளது.

என்ஜின் ஸ்டார்ட் ஆனதும் ஏ.சி. ஜெனரேட்டரும் ஓடத் தொடங்கி பேட்டரியில் மின்சாரம் சார்ஜ் ஆகும்.

இதில் 5 சென்சார்கள் உள்ளன. இது தொடர்ந்து சீரான வேகத்தை அளிக்க உதவுகிறது. டம்பிள் புளோ தொழில்நுட்பம் எனும் புதிய நுட்பத்தை ஹோண்டா நிறுவனம் இதில் பயன்படுத்தியுள்ளது.

இது என்ஜின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இதில் உள்ள டிஜிட்டல் மீட்டர், எரிபொருள் மூலம் எவ்வளவு கி.மீ. தூரம் பயணிக்கலாம், சராசரி எரிபொருள் அளவு உள்ளிட்டவற்றை துல்லிய மாகக் காட்டும். சைடு ஸ்டாண்ட் இன்டிகேட்டரும் உள்ளது.

என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் சுவிட்ச் உள்ளது. முகப்பு விளக்கு வெளிச்சத்தை அதிகரிக்க வும், குறைக்கவும், சிக்னல் தெரிவிக்கவும் சுவிட்ச்கள் உள்ளன.

டீலக்ஸ் மாடல் விலை சுமார் ரூ.74,212. ஸ்மார்ட் மாடல் விலை சுமார் ரூ.77,712.

Tags:    

மேலும் செய்திகள்