இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பில் முதலிடத்தில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத் தயாரிப்புகளில் இளைஞர்களைக் கவரும் கரிஸ்மா மாடல் மோட்டார் சைக்கிள் தற்போது மேம்படுத்தப்பட்டு கரிஸ்மா எக்ஸ்.எம்.ஆர். என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது. இதன் வடிவமைப்பு முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு பேர் சவுகரியமாகப் பயணிக்கும் வகையில் இரண்டு தனித்தனி இருக்கைகள் இதில் உள்ளன. சிறிய அளவில் அழகிய வடிவமைப்பு கொண்ட எக்ஸாஸ்ட் உள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1,72,900. லிக்விட் கூல்டு என்ஜினைக் கொண்டுள்ள இதில் 210 சி.சி. திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 25.5 ஹெச்.பி. திறனை 9,250 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 204 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 7,250 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும்.
மேலும் இது 6 கியர்களுடன் ஸ்லிட் அசிஸ்ட் கிளட்ச் வசதி கொண்டது. இதில் டிரெலிஸ் பிரேம், முன்புறம் டெலஸ்கோப்பிக் போர்க்கும், பின்புறம் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான மோனோ ஷாக் அப்சார்பரும், முன் சக்கரத்திற்கு டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்திற்கு டிரம் பிரேக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. புளூடூத் இணைப்பு, அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான விண்ட் ஸ்கிரீன், எல்.சி.டி. திரை, எல்.இ.டி. முகப்பு விளக்கைக் கொண்டது.
மஞ்சள், சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களில் இது வந்துள்ளது.