ஹார்லி டேவிட்சன் அனிவர்சரி எடிஷன்
பிரீமியம் மோட்டார் சைக்கிள் நிறுவனமான ஹார்லி டேவிட்சன் தனது 120-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கிளாசிக், பேட் பாய், ஸ்ட்ரீட் கிளைட், ரோட் கிளைட் உள்ளிட்ட மாடல்களில் அனிவர்சரி எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.;
இவை அனைத்துமே சிவப்பு-கருப்பு இரட்டை வண்ணத்தில் வந்துள்ளது. கருப்பு வண்ணத்திலான எக்ஸாஸ்ட் அழகிய தோற்றத்தை அளிக்கிறது.
இது 1,868 சி.சி. திறன் கொண்ட மில்வாக்கி 8 வி டுவின் என்ஜினைக் கொண்டது. இது 5,020 ஆர்.பி.எம். சுழற்சியில் 94 ஹெச்.பி. திறனையும், 155 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். கிளைட் மாடல் விலை சுமார் ரூ.29.51 லட்சம். பேட் பாய் விலை சுமார் ரூ.21.41 லட்சம்.