டுகாடி மான்ஸ்டர் எஸ்.பி
இருசக்கர பிரிவில் சாகச மற்றும் பந்தய மோட்டார் சைக்கிளைத் தயாரிக்கும் டுகாடி நிறுவனம் இந்தியாவில் மான்ஸ்டர் எஸ்.பி. மாடலை அறிமுகப் படுத்தியுள்ளது.
இதன் விற்பனையக விலை சுமார் ரூ.15.95 லட்சம். சீறிப் பாயும் வகையில் இதன் எடை குறைக்கப்பட்டுள்ளது. முன்புறம் உள்ள அழகிய வடிவிலான பிரேம் வாகனத்திற்கு மேலும் அழகு சேர்க்கிறது. இது ஸ்திரமான அலுமினியத்தால் ஆனது. இதனால் வாகனத்தின் எடை பெருமளவு குறைந்துள்ளது.
இது 937 சி.சி. திறன் கொண்டது. இது அதிகபட்சம் 111 ஹெச்.பி. திறனை 9,250 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 93.2 நியூட்டன் டார்க் இழு விசையை 6,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்துகிறது. முழுவதும் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான ஓஹ்லின்ஸ் ஷாக் அப்சார்பர் மற்றும் லித்தியம் அயன் பேட்டரி இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4.3 அங்குல தொடுதிரை உள்ளது.