பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 3

பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் புதிதாக பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 3 எக்ஸ் டிரைவ் 20 டி எக்ஸ் லைன் (விலை சுமார் ரூ.67,50,000) மற்றும் எக்ஸ் 3 எக்ஸ் டிரைவ் 20 டி. எம். ஸ்போர்ட் (விலை சுமார் ரூ.69,90,000) என இரண்டு வேரியன்ட்களை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2023-04-13 10:00 GMT

வெள்ளை, நீலம், கிரே, கருப்பு மற்றும் சபையர் நிறங்களில் வந்துள்ளது. கிட்னி வடிவிலான கிரில், ஒருங்கிணைந்த அடாப்டிவ் எல்.இ.டி. முகப்பு விளக்கு, பின்புற எல்.இ.டி. விளக்குகள் இதற்கு அழகிய தோற்றப் பொலிவை அளிக்கிறது. 19 அங்குல அலாய் சக்கரம் ஒய் வடிவ ஸ்போக்ஸுடன் இடம்பெற்றுள்ளது. உள்புறம் பன்முக செயல்பாடுகளைக் கொண்ட ஸ்டீயரிங் சக்கரம், மின்சாரத்தில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான இருக்கைகள், கண்ணாடியால் ஆன மேற்கூரை, 3 நிலைகளி லான கிளைமேட் கண்ட்ரோல் வசதி சவுகரியமான பயணத்தை உறுதி செய்கிறது.

இதில் டுவின் பவர் டர்போ தொழில்நுட்பம் கொண்ட டீசல் என்ஜின் 140 கிலோவாட் மற்றும் 190 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும். 1,750 முதல் 2,500 ஆர்.பி.எம். சுழற்சியில் 400 நியூட்டன் மீட்டர் டார்க் விசை வெளிப்படும். காரை ஸ்டார்ட் செய்து 7.9 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 213 கி.மீ. இதில் அனைத்து சக்கர சுழற்சி கொண்ட மாடலை தேர்வு செய்யலாம். வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு இணைப்பு வசதி கொண்டது. பி.எம்.டபிள்யூ. இயங்குதளம் உடையது.

12.3 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. இனிய இசையை வழங்க 464 வாட் திறன் கொண்ட ஹார்மன் கார்டோன் சரவுண்ட் சிஸ்டம் 16 ஸ்பீக்கரைக் கொண்டுள்ளது. இதில் 8 ஆட்டோமேடிக் கியர்கள், பாதுகாப்பான பயணத்துக்கு 6 ஏர் பேக்குகள் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்