50 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆங்க்லியன் ஒமேகா குழுமத்தின் ஒரு பிரிவான ஒமேகா செய்கி மொபிலிடி நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பேட்டரியில் இயங்கும் ஆட்டோவை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஓ.எஸ்.எம். ஸ்ட்ரீம் சிட்டி மற்றும் ஸ்ட்ரீம் சிட்டி ஏ.டி.ஆர். என்ற பெயரில் இரண்டு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. டிரைவர் உட்பட நான்கு பேர் சவுகரியமாக பயணிக்கலாம்.
இதில் லித்தியம் அயன் பேட்டரி (48 வோல்ட்) பயன்படுத்தப் பட்டுள்ளது. ஏ.டி.ஆர். மாடலில் மாற்றத்தக்க வகையிலான பேட்டரி வசதி உள்ளது. இதன் நீளம் 2,800 மி.மீ., அகலம் 1,320 மி.மீ. உயரம் 1,802 மி.மீ. ஆட்டோவின் மொத்த எடை 950 கி.கி. ஒரு முறை சார்ஜ் செய்தால் 117 கி.மீ. தூரம் வரை பயணிக்க லாம். ஸ்ட்ரீம் சிட்டி மாடல் ஆட்டோவை வீட்டில் சார்ஜ் செய்ய முடியும்.
ஓ.எஸ்.எம். ஸ்ட்ரீம் சிட்டி மாடல் விலை சுமார் ரூ.3.01 லட்சம்.
ஓ.எஸ்.எம். ஸ்ட்ரீம் சிட்டி ஏ.டி.ஆர். மாடல் விலை சுமார் ரூ.1.85 லட்சம்.