பஜாஜ் பல்சர் என் 150

பல்சர் என் 250 மற்றும் பல்சர் என் 160 மாடல்களை அறிமுகப் படுத்திய இந்நிறுவனம் தற்போது என் 150 மாடலை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2023-10-04 09:05 GMT

இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்த மோட்டார் சைக்கிளில் பல்சர் மாடல் எப்போதுமே முதலிடத்தில் உள்ளது. பஜாஜ் நிறுவனம் இந்த பிரிவில் பல்வேறு மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து இளைஞர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது பல்சர் என் 150 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1,18,182.

ஒன்றரை ஆண்டு இடை வெளியில் பல்சர் என் 250 மற்றும் பல்சர் என் 160 மாடல்களை அறிமுகப் படுத்திய இந்நிறுவனம் தற்போது என் 150 மாடலை அறிமுகம் செய்துள்ளது.

ஏரோ டைனமிக் வடிவமைப்பு, பெரிய அளவிலான பெட்ரோல் டேங்க், சற்று உயரமான பின் இருக்கை ஆகியன இதன் தனித்துவ அடை யாளத்தை வெளிப் படுத்துவதாக அமைந் துள்ளது. இது 14.5 பி.எஸ். திறனையும், 13.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். மோனோ ஷாக் அப்சார்பர் சொகுசான பயணத்தை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. எல்.இ.டி. புரொஜெக்டர் முகப்பு விளக்கு இதற்கு மேலும் அழகு சேர்க்கிறது.

வெள்ளை, கருப்பு நிறங்களில் கண்கவர் ஸ்டிக்கர்களுடன் வெகு நேர்த்தியான ஸ்போர்ட்ஸ் மோட்டார் சைக்கிளாக இது அறிமுகமாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்