ஆஸ்டன் மார்ட்டின் டி.பி 12
ஸ்போர்ட்ஸ் கார்களைத் தயாரிக்கும் பிரிட்டனைச் சேர்ந்த ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனம் புதிய மாடலாக டி.பி 12. காரை அறிமுகம் செய்துள்ளது.;
இது வி 8 மற்றும் வி 12 என்ஜினைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிமுகமான டி.பி 11. மாடலின் மேம்பட்ட வடிவமைப்பைக் கொண்ட இது அடுத்த தலைமுறை மாடலாகும்.
இது 769 ஹெச்.பி. திறனையும், 800 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும் 4.0 வி 8 டர்போ என்ஜினைக் கொண்டுள்ளது. முன்புறம் மற்றும் பின்புற வடிவமைப்பில் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் முகப்பு விளக்கு அழகிய வடிவமைப்பைக் கொண்டதாக உள்ளது. பானட்டில் காற்று வெளியேறும் வசதிக்கான பகுதிகள் உள்ளன. இதன் விலை ரூ.1.54 கோடி முதல் ஆரம்பமாகிறது.
தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் 110-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் டி.பி. சீரிஸ் மாடல் அறிமுகமாகி 75 ஆண்டுகளாவதைக் கொண்டாடும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிடி கண்ட்ரோல் (இ.எஸ்.சி.) சிஸ்டம் உள்ளது. இதே பிரிவில் உள்ள மற்ற நிறுவன மாடல் களை விட இது பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
இதை ஸ்டார்ட் செய்து 3.5 விநாடிகளில் 100 கி.மீ. வேகத் தைத் தொட்டுவிட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 325 கி.மீ. ஆகும். இதில் 5 விதமான ஓட்டும் நிலைகள் உள்ளன.