இன்றைய ராசிபலன் - 25.07.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

Update: 2024-07-25 01:45 GMT

இன்றைய பஞ்சாங்கம்

வியாழக் கிழமை

தமிழ் வருடம் :குரோதி

தமிழ் மாதம் :ஆடி

நாள்: 9

ஆங்கில தேதி: 25

ஆங்கில மாதம்: ஜுலை

வருடம்: 2024

நட்சத்திரம் : இன்று இரவு 08-41 வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி

திதி ; இன்று காலை 8-40 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி

யோகம்: சித்த, யோகம்

நல்ல நேரம் மாலை: 10-45 to 11-45

ராகு காலம் பிற்பகல்:1-30 to 3-00

எமகண்டம் காலை: 6-00 to 7-30

குளிகை காலை: 9-00 to 10-30

கௌரி நல்ல நேரம் காலை :12-15 to 1-15

கௌரி நல்ல நேரம் மாலை: 6-30 to 7-30

சூலம்: தெற்கு

சந்திராஷ்டம்: புனர்பூசம், பூசம்

இன்றைய ராசிபலன்

மேஷம்

காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வாகன வசதிப் பெருகும். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.வரவேண்டிய பணம் வந்து சேரும். வீடு கட்டும் திட்டம் பலிதமாகும். வியாபாரத்தில் புது வாடிக்யைளர்கள் அதிகரிப்பர்.நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் :ஆரஞ்ச்

ரிஷபம்

திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா, ப்ரேக் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். சிறுசிறு விபத்துகளும் வந்துப் போகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மிதுனம்

அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்களின் திடீர் சந்திப்பு உற்சாகத்தைத் தரும். மறக்க முடியாத சம்பவம் நடக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துபோகும். தன் கீழ் பணிபுரிபவர்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கடகம்

வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிக சம்பளத்திற்காக புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். உடல் நிலையில் கவனம் தேவை. பண விஷயத்தில் கறாராக இருங்கள்.யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

சிம்மம்

வெளியூர் செய்தி மகிழ்ச்சியைத் தரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள்.வழக்கு சாதகமாக முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.சகோதர வகையில் உதவிகள் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கன்னி

அக்கம்- பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். மாணவர்கள் பலவீனமான பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கடன் பிரச்சினை தீரும். காதல் ஜோடிகள் திருமணத்தைப் பற்றி முடிவெடுப்பர்.குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

துலாம்

சமூகத்தில் அந்தஸ்து உயரும். தங்கள் பெண்ணுக்கு நல்ல வரண் அமையும். உங்கள் உடல் உஷ்ணம் அதிகமாகும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும். வீடு வாங்க கடன் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

விருச்சிகம்

குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். மாணவர்கள் கல்விச் சுற்றுலாவிற்கு ஆயத்தம் ஆவர். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

தனுசு

வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். கவனம் தேவை. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சில நேரங்களில் சோர்வோடும் களைப்போடும் காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மகரம்

வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பணப்பிரச்சினை இருக்காது.சுபச் செலவுகள் அதிகமாகும். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். தேக ஆரோக்கியம் சீர்படும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்

கும்பம்

மார்கெட்டிங் பிரிவினருக்கு ஆர்டர்கள் குவியும். தாய் வழி உறவினர்கள் கை கொடுப்பர். பிள்ளைகள் தங்கள் தவறை உணர்வர். பங்குச் சந்தையில் கவனம் தேவை. தங்கள் பிள்ளை நன்கு படிப்பர். குடும்பத்தில் விவாதம் வந்துப் போகும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

மீனம்

கமிஷன் மற்றும் ஏஜென்சி துறையினருக்கு அதிக சதவீதம் லாபம் கிடைக்கும்.பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு




 


Tags:    

மேலும் செய்திகள்