இன்றைய ராசிபலன் - 08.12.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

Update: 2024-12-08 00:59 GMT

இன்றைய பஞ்சாங்கம்:

டிசம்பர் 8

கிழமை: ஞாயிற்றுக்கிழமை

தமிழ் வருடம்: குரோதி

தமிழ் மாதம்: கார்த்திகை

நாள்: 23

ஆங்கில தேதி:8

ஆங்கில மாதம்:டிசம்பர்

வருடம்:2024

நட்சத்திரம்:இன்று பிற்பகல் 2.37 வரை சதயம் பின்பு பூரட்டாதி

திதி: இன்று காலை 07.52 வரை சப்தமி பின்பு அஷ்டமி

யோகம்:சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 7.45 - 8.45

நல்ல நேரம் மாலை: 3.15 - 4-15

ராகு காலம் காலை: 04-30 - 06-00

எமகண்டம்: காலை 12.00 - 1.30

குளிகை மாலை: 3.00 - 4.30

கௌரி நல்ல நேரம் காலை: 10.45 - 11.45

கௌரி நல்ல நேரம் மாலை: 1.30 - 2.30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்

மாணவர்கள் ஆசிரியரிடம் நன்மதிப்பைப் பெறுவர். எதிர்பார்ப்பு ஒவ்வொன்றாக நிறைவேறி வரும். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும். நவீன கணினி வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் தங்களை வந்தடையும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிஷபம்

உத்யோகத்தில் தங்களுக்கெதிராக செயல்பட்ட அதிகாரி இடமாற்றம் செய்யப்படுவார். வெளி நாட்டில் வசிப்பவர்கள் தங்களுக்கு உதவுவர். திடீர் பணவரவு ஆனந்தத்தைத் தரும். மேற்படிப்பிற்கு வெளிநாடு செல்வர். அரசு வேலைகள் சாதகமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மிதுனம்

புதிய வாடிக்கையாளர்களின் வருகை மனதிற்கு தெம்பளிக்கும். கணவரின் அன்புக்குரியவராக விளங்குவர். சுபநிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறும். மாணவர்கள் ஞாபகத்திறன் அபாரமாக செயல்படும். பணம் பல வழியிலும் வந்து சேரும். இயன்ற உதவியைப் பிறருக்குச் செய்வீர்கள். பெண்களின் சேமிப்பு உயரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

கடகம்

இன்று பூசம், ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் ஆதலால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்கலாம். கவனம் தேவை. நட்சத்திரக்காரனான ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இல்லை. தங்கள் பணியை தொடரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

சிம்மம்

பிள்ளைகள் நன்கு படிப்பர். சொகுசுகாரில் பயணம் உண்டாகும். அந்த பயணத்தால் வெற்றிகள் குவியும்..குடும்பத்தில் மகிழ்ச்சியில் திளைப்பர். தேவையற்ற பயம் நீங்கும். அரசு விசயங்களில் ஆதாயம் உண்டு. மருத்துவர்கள் சாதனை படைப்பர். முதியோர்கள் பிரார்த்தனை நிறைவேறும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கன்னி

நல்ல விசயங்களில் திருப்பம் கிடைக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். உத்யோகஸ்தர்களுக்கு இட மாற்றம் உண்டாகும் குழந்தைகளால் சந்தோஷம் உண்டாகும். மூளை சுறுசுறுப்படையும். உடல்நிலை நன்றாக இருக்கும். மாணவர்கள் நன்கு படிப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

துலாம்

உறவினர்களின் வீட்டு விஷேசத்தில் கலந்து கொள்வீர்கள் பணவரவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் வந்து சேரும் மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு சம்பள உயர்வு உண்டு. சுப விசேஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

விருச்சிகம்

புதிய வீட்டிற்கு குடிபுகுவர். அலுவலகத்தில் வேலைபளு குறையும். வியாபாரத்தின் சூட்சுமத்தை அறிவீர்கள். மாணவர்கள் பொறுப்புணர்ந்து கல்வி கற்பர். பழைய கடன்பாக்கி தீரும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவர். வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்து செய்வீர்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

தனுசு

புதிய நபர்களிடம் கவனம் மிக அவசியம். வியாபாரத்தில் போட்டிகள் நிலவும். எதிரிகள் விலகுவர். கொடுக்கல் வாங்கல் சிறக்கும். தம்பதிகளின் சந்தேகம் தீரும். சளித் தொந்தரவு நீங்கும். விரும்பிய நாட்டின் விசா கிடைக்கும். திடீர் பணவரவு மகிழ்ச்சியைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்

மகரம்

தம்பதிகள் அன்பில் திளைப்பர். வியாபாரத்தில் ஈடுபாடு கூடும். அலைச்சல்களால் அசதி ஏற்படும். சகோதரர் வழியில் ஆதரவு கிடைக்கும். எதிரிகள் சரணடைவர். பிள்ளைகள் நன்கு படிப்பர். நீண்ட நாட்களாக தர வேண்டிய கடன்கள் பைசலாகும்.சேமிப்பு அதிகரிக்கத் துவங்கும். காதலர்கள் ஒன்று சேருவர்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கும்பம்

புதிய நண்பர்களின் வருகை உண்டு. பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களால் ஆதாயம் உண்டாகும். தேவையற்ற விசயத்திற்கு முக்கியத்துவம் தராதீர்கள். தேகம் பொலிவு பெறும். கணவன் மனைவி உறவு மேம்படும் சேமித்த பணத்தில் தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மீனம்

அதிரடியான முயற்சிகள் வெற்றி தரும். உடல் நலத்தில் முன்னேற்றம் உண்டு. இரும்பு தொழிலில் லாபம் கூடும். அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கும். மனைவியின் முன்னேற்றத்தில் பங்களிப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

 

Tags:    

மேலும் செய்திகள்