புரட்டாசி மாத ராசி பலன்கள் 18-09-2022 முதல் 17-10-2022 வரை
மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தை மனதில் பதித்து வைத்துள்ள துலாம் ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் விரயாதிபதி புதனுடன் சஞ்சரிப்பதால் வருமானம் திருப்திகரமாக இருந்தாலும், செலவு இருமடங்காகும். அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.
கன்னி - சுக்ரன் சஞ்சாரம்
புரட்டாசி 8-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் நீச்சம்பெறுவதால், ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு குறையும். வீடு மாற்றங்களும், விரும்பத் தாகாத விதத்தில் அமையும். அதே நேரத்தில் அஷ்டமாதிபதி யாகவும் சுக்ரன் விளங்குவதால், ஒருசில காரியங்கள் எதிர்பாராத வகையில் நல்ல விதமாக முடியும். எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது.
கன்னி - புதன் சஞ்சாரம்
புரட்டாசி 16-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் புதன், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், உச்சம்பெறும் பொழுது நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியாக புதன் விளங்குவதால் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வகையில் எடுத்த முயற்சி வெற்றி தரும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். வீட்டைப் பழுதுபார்ப்பது, விவசாயத்தைக் கவனிப்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள்.
மிதுன - செவ்வாய் சஞ்சாரம்
புரட்டாசி 22-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது அசையாச் சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். கடன்சுமை குறையும். அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனச் செவ்வாய் மகரச் சனியைப் பார்ப்பதால், பய உணர்ச்சி ஏற்படும். இந்த காலகட்டத்தில் எதிர்மறை சிந்தனைகளை வளரவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இக்காலத்தில் வரும் திருமணப் பேச்சுக்கள் நிலையானதாக இருக்காது. நீங்கள் விழிப்புணர்ச்சியுடன் இருந்தாலும் ஒருசில ஏமாற்றங்களைச் சந்திக்கத்தான் வேண்டும்.
சனி வக்ர நிவர்த்தி
புரட்டாசி 23-ந் தேதி, சனி வக்ர நிவர்த்தியாகிறார். அப்பொழுது அர்த்தாஷ்டமச் சனி பலம்பெறுகிறார். எனவே எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. குறிப்பாக ஆரோக்கியத் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் உண்டு. உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்ய இயலாது. கட்டுப்பாட்டில் இருந்த கடன்சுமை கை மீறிச் செல்லும். அனுசரித்துச் செல்வதன் மூலமே, அன்றாட வாழ்க்கை நன்றாக அமையும்.
இம்மாதம் துர்க்கை வழிபாடு துயரங்களைப் போக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 19, 20, 23, 24, 30, அக்டோபர்: 1, 2, 5, 6, 16, 17.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதத் தொடக்கத்தில் பொருளாதாரம் திருப்தியாக இருந்தாலும், மாதத்தின் மையத்தில் பணப்பற்றாக்குறை அதிகரிக்கும். அா்த் தாஷ்டமச் சனி பலம்பெறும் இந்த நேரத்தில், ஆரோக்கியத் தொல்லை ஏற்படும். அருகில் இருப்பவர்களின் அனுசரிப்பு குறையும். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடு உண்டாகும். பணிபுரியும் பெண்கள், பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைத்தால் பிரச்சினைகள் உருவாகும்.