மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கும் விழா

முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அளிக்கும் விழாவானது, மாணவர்கள் தங்கள் மருத்துவ கல்வியின் முதல் கட்டத்தில் அதிகாரப்பூர்வமாக நுழைவதை அடையாளப்படுத்துவதாக அமைந்துள்ளது.;

Update: 2024-11-08 13:38 GMT

தென்கிழக்கு ஆசியா நாடான திமோர் லெஸ்டேவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகமான யுனிவர்சிடேட் கத்தோலிகா டிமோரென்ஸ் சார்பில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கும் விழா சமீபத்தில் சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது.

விழாவில் முதலாம் ஆண்டு சர்வதேச மருத்துவ மாணவர்கள், அவரது குடும்பத்தினர்கள் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். 2024-2025 ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பில் சேர்ந்த பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த சர்வதேச மாணவர்கள் மருத்துவ படிப்பை அதிகாரப்பூர்வமாக தொடங்கும் விதமாக அவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கப்பட்டது.

உலகத்தரம் வாய்ந்த மருத்துவ கல்விதென்கிழக்கு ஆசியா நாடான திமோர் லெஸ்டேவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகமான யுனிவர்சிடேட் கத்தோலிகா டிமோரென்ஸ் சார்பில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கும் விழா சமீபத்தில் சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது.யை அளிப்பதில் உறுதி கொண்டுள்ள யுனிவர்சிடேட் கத்தோலிகா டிமோரென்ஸ் பல்கலைக்கழகத்திற்கும், அதன் முதலாம் ஆண்டு சர்வதேச மருத்துவ மாணவர்களுக்கும் இந்த விழா ஒரு முக்கிய சந்தர்ப்பமாக அமைந்தது. நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் கல்வியியல் துறையைச் சேர்ந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் சர்வதேச முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையிலும், மருத்துவக் கல்வியில் வளர்ந்து வரும் உலகளாவிய ஒத்துழைப்பை குறிப்பிடும் வகையிலும் புதுடெல்லியில் உள்ள திமோர்-லெஸ்டே ஜனநாயக குடியரசு தூதரக விவகாரங்களுக்கான பொறுப்பு அதிகாரி 'பிரான்சிஸ்கோ டியோனிசியோ பெர்னாண்டஸ்' கலந்து கொண்டார். மேலும், அவர் மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கினார்.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி (சி.எம்.ஓ) மற்றும் சென்னை இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் செய்யது அப்துல் காதர் விழாவில் பேசும்போது, மருத்துவத் தொழில்முறை மற்றும் அதற்கான அர்ப்பணிப்பின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.

அவரையடுத்து, குஜராத் மாநிலத்தின் ஜெய் அம்பே குழும நிறுவனங்களின் அறங்காவலர் பிரவீன் கஜேரா பேசுகையில், பல்கலைக்கழகத்தின் சர்வதேச முயற்சிக்கு தனது ஆதரவை அளிப்பதாகவும், இந்த வரலாற்று நிகழ்வில் பங்கேற்பதில் பெருமிதம் அடைவதாகவும் தெரிவித்தார்.

யு.சி.டி துணை இயக்குநரும், இந்தோமெட் எஜுகேர் பிரைவேட் லிமிடெட் நிறுவன தலைவருமான டாக்டர் ராஜா தங்கப்பன் தொடக்க உரையாற்றினார். அவர் தனது உரையில், மருத்துவ நடைமுறையில் கடின உழைப்பு, இரக்கம் மற்றும் மருத்துவ நெறிமுறைகளின் தரம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். விழாவில் கலந்து கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களையும் பாராட்டினார். அவர், சமீபத்திய என்.எம்.சி விதிமுறைகளைப் பற்றி தெளிவாக குறிப்பிட்டதோடு, 2021-ம் ஆண்டின் எப்.எம்.ஜி.எல் விதிமுறைகளுக்கு இணங்கும் ஒரே நாடு திமோர் - லெஸ்டே என்றும் தெரிவித்தார். திமோர் – லெஸ்டேவில் மருத்துவ படிப்பை மேற்கொள்வதில் உள்ள சாதக அம்சங்களையும் மேற்கோள் காட்டிப் பேசினார்.

Full View

முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அளிக்கும் விழாவானது, மாணவர்கள் தங்கள் மருத்துவ கல்வியின் முதல் கட்டத்தில் அதிகாரப்பூர்வமாக நுழைவதை அடையாளப்படுத்துவதாக அமைந்துள்ளது. அத்துடன், மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, தியாகம் ஆகியவற்றை அங்கீகரிப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

மாணவர்கள் தங்கள் புதிய வெள்ளை அங்கிகளை அணிந்து நின்றபோது, சமூகத்துக்கு சேவை செய்யவும், அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய எதிர்கால மருத்துவர்களாக மாறும் பொறுப்பையும் நினைவூட்டினர்.

விழாவில் மருத்துவத் துறையில் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் கற்றல் முறை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மகிழ்ச்சி, உற்சாகம், பெருமிதம் ஆகிய உணர்வு நிரம்பிய மாணவர்கள் மருத்துவ நிபுணர்களாக ஆகவும், மனித சமூகத்திற்கு சேவை புரியும் மருத்துவ நிபுணராக இருக்கவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனையடுத்து விழா தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது.

மேலும் விவரங்களுக்கு: திமோர்-லெஸ்டே நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகள் குறித்து அறிந்துகொள்ள கீழே உள்ள இணையதளம் அல்லது எண்ணை தொடர்பு கொள்ளவும்.

தொடர்பு எண்:  1800 208 9848

இணையதளம்:   www.uct.university

மேலும் செய்திகள்