அதிரடி விலையில் இருசக்கர பேட்டரி வாகனங்கள் அறிமுகம்
டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் புதிய மைல்கல்லை எட்டியதாக பெருமிதம்;
வாகன பயன்பாட்டில் சூழல் மாசுபாட்டை உருவாக்காத வகையில் அதன் பயன்பாட்டை உறுதி செய்யும் வகையிலும், வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ற வகையிலும் வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டு உலக அளவில் முன்னணி நிறுவனமாக திகழும் டி.வி.எஸ் மோட்டர் நிறுவனம் 2.2 கிலோவாட் பேட்டரி சக்தி கொண்ட டி.வி.எஸ் ஐகியூப் (TVS iQube) என்ற புதிய மாடல் இருசக்கர மின்சார வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.
அனைத்து தரப்பு மக்களுக்கும் இரு சக்கர மின்சார வாகன வசதி கிடைக்கும் வகையில் டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தினர் தங்களது சொந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கிய முன்னோடி தயாரிப்பான ஐகியூப் இரு சக்கர மின் வாகனங்களின் விற்பனை 3,00,000 என்ற மைல் கல்லை எட்டியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் மின்சார வாகன பிரிவின் மூத்த துணைத்தலைவர் மனு சக்சேனா கூறியதாவது :
"இந்திய அளவில் மக்களால் பெரிதும் விரும்பப்படும் டி.வி.எஸ் மோட்டர் நிறுவன தயாரிப்புகளான ஐகியூப் என்ற 2.2 கிலோவாட் மின் சக்தி கொண்ட மாடல், டி.வி.எஸ் ஐகியூப் எஸ்.டி என்ற 3.4 கிலோவாட் மற்றும் 5.1 கிலோவாட் ஆகிய பேட்டரி ஆற்றல் கொண்ட இரு மாடல்களும் இப்போது சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. அறிமுக விற்பனை என்ற வகையில் ரூ.94,999 என்ற அளவில் அவற்றின் கவர்ச்சிகரமான விலை தொடங்குகிறது.
இருசக்கர மின்சார வாகனங்களை பொறுத்தவரை 3.4 கிலோவாட் மற்றும் 5.1 கிலோவாட் என்ற பெரிய அளவிலான பேட்டரி கொண்ட டி.வி.எஸ் ஐகியூப் எஸ்.டி மற்றும் டி.வி.எஸ் ஐகியூப் என்ற மாடல்கள் ஐந்து பிரிவுகளில் 11 வகையான வண்ணங்களில் இப்போது விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
வாகன தயாரிப்பில் நீடித்த பயன் அளிக்கும் வகையில் எப்போதும் செயல்பட்டு வரும் முன்னோடியான டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் மீண்டும் அதன் நம்பகமான, புதுமையான மின்சார இருசக்கர வாகன தயாரிப்புகளை அறிமுகம் செய்வதன் மூலம் அந்த நோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அவ்வகையில் அறிமுகமான 2.2 கிலோவாட் பேட்டரி சக்தி கொண்ட டி.வி.எஸ் ஐகியூப் மாடல் வண்டிகள் வாடிக்கையாளர்களின் பட்ஜெட் தொகைக்கேற்ப இப்போது ரூ. 94,999 என்ற தொடக்க விலையில் ஷோ-ரூம்களில் கிடைக்கின்றன.
டி.வி.எஸ் ஐகியூப் மாடல் இருசக்கர மின்சார வாகனங்கள் மூன்று அடிப்படை கொள்கைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன. முதலாவது தொழில்நுட்பம், பேட்டரி சார்ஜ், விலை ஆகியவற்றின் அடிப்படையில் வாடிக்கையாளர் விருப்ப தேர்வுகளுக்கேற்ப பல மாடல்கள் உள்ளன. இரண்டாவது பாதுகாப்பு, மற்றும் வாடிக்கையாளர் அனுபவம் ஆகிய அடிப்படையில் முழு உத்தரவாதம் அளிப்பதாகும். மூன்றாவது, வாடிக்கையாளர்கள் எளிதாக வண்டியை இயக்கும் வகையில் சுலப உபயோகத்துக்கேற்ற வகையில் வாகன வடிவமைப்பு என்பதாகும். அந்த வகையில், டி.வி.எஸ் ஐ கியூப் மாடல் 'பெரிய கனவுகளுக்கான நல்ல தொடக்கம்' என்ற வாக்குறுதியின் வடிவமாக அமைந்துள்ளது.
மின்சார வாகன தயாரிப்பில் டி.வி.எஸ் நிறுவனம் புதுமை மற்றும் நிலைத்தன்மை கொண்ட தயாரிப்புகளை அளிக்க கடமைப்பட்டுள்ளது. டி.வி.எஸ் ஐகியூப் குடும்பத்தின் வளர்ச்சி 3 லட்சம் என்ற அளவை எட்டியுள்ளது. விரைவாக சார்ஜ் செய்யும் வகையில் அறிமுகமான டி.வி.எஸ் ஐகியூப் மற்றும் டி.வி.எஸ் ஐகியூப் எஸ்.டி ஆகிய மின் வாகனங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் உள்ள எங்களது 434 ஷோ-ரூம்களில் அவை இப்போது விற்பனைக்கு கிடைக்கின்றன. வாடிக்கையாளர்களின் வாகன இயக்கத்தில் உற்ற துணையாக உள்ள டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் தற்போது நம்பிக்கைக்குரிய மின்சார வாகனத்தை இயக்கும் அனுபவத்தை தருவதுடன் அவர்கள் வெற்றிப்பயணத்தை தொடரவும் துணை நிற்கிறது.
டி.வி.எஸ் ஐகியூப் 2.2 கிலோவாட் பேட்டரி, 3.4 கிலோவாட் பேட்டரி மற்றும் அதே அளவு பேட்டரி கொண்ட டி.வி.எஸ் ஐகியூப் எஸ் என்ற வகைகளும், 3.4 கிலோவாட், 5.1 கிலோவாட் பேட்டரி சக்தி கொண்ட டி.வி.எஸ் ஐகியூப் எஸ்.டி என்ற மாடலும் சேர்த்து 5 வகையான இருசக்கர வாகனங்கள் தற்போது விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
டி.வி.எஸ் ஐகியூப் 2.2 கிலோவாட் பேட்டரி சக்தி கொண்ட இரு சக்கர வாகனங்கள் 950 வாட் சார்ஜர், 5 அங்குல அகலம் கொண்ட டி.எப்.டி வண்ணத்திரை, இரண்டு மணிநேரத்தில் 80 சதவீதம் விரைவாக சார்ஜ் ஆகும் திறம் கொண்டவையாக உள்ளன. அத்துடன், பாதுகாப்பு எச்சரிக்கை அம்சங்கள், திருப்பங்களில் வழிகாட்டும் அமைப்பு, பேட்டரி உபயோக எச்சரிக்கை, இருக்கையின் கீழ் 30 லிட்டர் அளவுள்ள பொருட்கள் வைப்பிடம், 75 கி.மீ அதிகபட்ச வேகம், ஜூன் 30 வரை ரூ.94,999 என்ற அறிமுக விலை, வால்நட் பழுப்பு மற்றும் முத்து வெள்ளை ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன.
டி.வி.எஸ் ஐகியூப் 2.2 கிலோவாட் மாடலில் ரூ.12,300 வரையும், ஐகியூப் 3.4 கிலோவாட் மாடலில் ரூ.6700 வரையும் கேஷ்பேக் சலுகை ஜூன் 30-ம் தேதி வரை அளிக்கப்படுகிறது.
டி.வி.எஸ் ஐகியூப் எஸ்.டி 5.1 கிலோவாட் பேட்டரி சக்தி கொண்ட இரு சக்கர வாகனங்கள் சார்ஜ் செய்தால் 150 கி.மீ தூரம் செல்லும் வகையிலும், 7 அங்குல அகலமுள்ள டி.எப்.டி வண்ணத்திரை, 950 வாட் சார்ஜர், 4 மணி 18 நிமிட நேரத்தில் சார்ஜ் ஆகும் திறன், 118-க்கும் மேற்பட்ட பலவகை இயக்க அம்சங்கள், குரல் வழி வழிகாட்டல், டிஜிட்டல் ஆவணங்கள் சேமிப்பு வசதி, இருக்கையின் கீழ் 32 லிட்டர் அளவுள்ள சேமிப்பறை, அதிகபட்சம் 82 கி.மீ செல்லும் திறம் ஆகிய அம்சங்கள் கொண்டவையாக உள்ளன. ரூ.1,85,373 என்ற அறிமுக ஷோ-ரூம் விலை மற்றும் ஜூலை 15-க்குள் வாங்குபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் போனஸ், வெண்கலம், பவளம், சாம்பல், நீலம் ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன.
டி.வி.எஸ் ஐகியூப் எஸ்.டி 3.4 கிலோவாட் பேட்டரி சக்தி கொண்ட இரு சக்கர வாகனங்கள் சார்ஜ் செய்தால் 100 கி.மீ தூரம் செல்லும் வகையிலும், 7 அங்குல அகலமுள்ள டி.எப்.டி வண்ணத்திரை, 950 வாட் சார்ஜர், 2 மணி 50 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் திறன், 118-க்கும் மேற்பட்ட பலவகை இயக்க அம்சங்கள், குரல் வழி வழிகாட்டல், டிஜிட்டல் ஆவணங்கள் சேமிப்பு வசதி, இருக்கையின் கீழ் 32 லிட்டர் அளவுள்ள சேமிப்பறை, அதிகபட்சம் 78 கி.மீ செல்லும் திறம் ஆகிய அம்சங்கள் கொண்டவையாக உள்ளன. ரூ.1,55,555 என்ற அறிமுக ஷோ-ரூம் விலை-இ.எம்.பி.எஸ் மானியம் உள்பட, வெண்கலம், பவளம், சாம்பல், நீலம் ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன."
இவ்வாறு டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் மின்சார வாகன பிரிவின் மூத்த துணைத்தலைவர் மனு சக்சேனா தெரிவித்தார்.