டிஜிட்டல் உலகில் பாதுகாப்பான பண பரிவர்த்தனை வழங்கும் சிட்டி யூனியன் பாங்க் (CUB)
இன்றைய நவீன டிஜிட்டல் உலகில் பண பரிவர்த்தனை பயன்பாடு மிகவும் முக்கியமானது. இதில் வங்கிகளின் சேவை அளப்பரியது.;
இன்றைய நவீன டிஜிட்டல் உலகில் பண பரிவர்த்தனை பயன்பாடு மிகவும் முக்கியமானது. இதில் வங்கிகளின் சேவை அளப்பரியது. 1904 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 120 ஆண்டுகளாக சிறப்பாக செயல்படுவதோடு டிஜிட்டல் துறையில் முன்னோடியாக திகழும் சிட்டி யூனியன் வங்கியின் பொது மேலாளர் மற்றும் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி G.சங்கரன் அவர்களை நேர்காணல் செய்தபோது அவர் கூறியவை பின்வருமாறு,
"சிட்டி யூனியன் வங்கி கணினி மயமாக்கப்பட்டதாலும், இணைய மற்றும் கை பேசி வழி சேவையில் நவீன தொழில்நுட்பங்களை சிறப்பாக செயல்படுத்துவதாலும், எங்களது 100 வாடிக்கையாளர்களில் கிட்டத்தட்ட 97 பேர் டிஜிட்டல் சேவைகளை உபயோகப்படுத்துகின்றனர். இதனால் எங்களுக்கு லாக் டவுன் காலத்தில் கூட வங்கி சேவை பெரிய அளவுக்கு பாதிக்காமல் வாடிக்கையாளர்கள் பயன் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது", என்றவர் மேலும் குறிப்பிட்டது,
"எங்களது வங்கியின் டிஜிட்டல் துறை செயல்பாட்டை சொல்லுவதென்றால்…
1990 இல் வங்கி கணினி மயமாக்கப்பட்டது. தற்போது 763 வங்கி கிளைகள் மற்றும் 1660 ஏடிஎம் மையங்கள் இந்தியா முழுவதும் இயங்கி வருகின்றன.
எங்கள் வங்கியின் சிபிஎஸ் அப்ளிகேஷன் 2004 இல் பயன்பாட்டுக்கு வந்தது. நெட்வொர்க் ஏடிஎம் செயல்பாடுகள் மற்றும் நெட் பேங்கிங் 2005 இல் தொடங்கப்பட்டது. மொபைல் பேங்கிங் 2010 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. பாயின்ட் ஆஃப் சேல்ஸ் இயந்திரங்கள் 2011இல் அறிமுகப்படுத்தப்பட்டன. எக்ஸ்பிரஸ் டெஸ்க் 2012 இல் கிளைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. மல்டி பங்சன் செயல்பாட்டு கியோஸ்க் 2013ல் அறிமுகப்படுத்தப்பட்டது. பணம் பெறும் இயந்திரங்கள் (BNAs) 2014 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. சுய சேவை பாஸ் புக் கியோஸ்க் மற்றும் காசோலை வைப்பு இயந்திரங்கள் 2015 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. கிரெடிட் கார்டுகள் 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்டன. மொபைல் வாலட்கள் 2016 இல் தொடங்கப்பட்டன.
CUB பல்வேறு தொழில்நுட்ப சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதில் முன்னோடியாக இருந்து வருவதை சில குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகள் மூலம் கூறலாம். அவை... இந்திய வங்கித் துறையில் வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்யும் முதல் ரோபோ 'CUB Lakshmi'. மொபைல் பேங்கிங் பயன்பாட்டின் ஒரு பகுதியாக முதல் பன் மொழி Chatbot சேவை. எட்டு மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Near Field Communication ஐ பயன்படுத்தி PoS டெர்மினல்களில் உபயோகிக்கக்கூடிய கீ செயின்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் வடிவில் டெபிட் கார்டுகளை முன்கூட்டியே அறிமுகப்படுத்தியது. அடிப்படை தொலைபேசி பயனர்களுக்கான டிஜிட்டல் கட்டணங்களில் கிராமப்புற பயன்பாட்டை அதிகப்படுத்துவதை நோக்கமாக கொண்ட UPI 123 pay. QR குறியீடுகளைப் பயன்படுத்தி, கார்டு இல்லாமல் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பதற்கு கார்டுலெஸ் கேஷ் வித்ட்ராவல் (ICCW) அறிமுகம். மொபைல் பேங்கிங்கிற்கான குரல் வழி அங்கீகாரம், இது கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. இந்த முயற்சி 5G கண்டுபிடிப்பின் ஒரு பகுதியாகும்.
வாடிக்கையாளர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதிலும் சிறந்த சேவையை வழங்குவதிலும் எங்கள் செயல்பாட்டால் தொடர்ச்சியான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் இயக்கப்படுகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் எந்நேரமும் எந்த இடத்திலிருந்தும் வங்கிச் சேவையைப் பயன்படுத்தலாம். தற்போது, எங்கள் வாடிக்கையாளர்களிடையே டிஜிட்டல் பயன்பாடு தோராயமாக 97% ஆக உள்ளது.
அனைத்து வங்கிப் பரிவர்த்தனைகளுக்கும், லாக்கர் செயல்பாடுகள் மற்றும் நகைக் கடனுக்கான நகைகளை அடகு வைப்பது போன்ற நேரடி தொடர்பு தேவைப்படுவதைத் தவிர, வாடிக்கையாளர்கள் இனி கிளைகளுக்குச் செல்லாமலேயே தங்கள் வங்கித் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.
மொபைல் பேங்கிங் மற்றும் வீடியோ KYC சரிபார்ப்பு செயல்முறை போன்றவற்றால் ஆன்லைன் மூலம் கணக்கு திறப்பு எளிதாக்கப்படுகிறது.
சிட்டி யூனியன் வங்கி (CUB) எண்ட்-டு-எண்ட் (End-to-End) டிஜிட்டல் கடன் விண்ணப்பம், வீட்டுக்கடன் மற்றும் MSME கடன்களுக்கான புதிய செயல்முறையை செயல்படுத்தியுள்ளது. இந்த டிஜிட்டல் செயல்முறை கடன் வாங்குபவர்களிடமிருந்து ஆவணங்களைப் பெறுகிறது, ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி விவரங்களுக்கான பிற ஏஜென்சிகளுடன் தொடர்பு கொள்கிறது, மேலும் விண்ணப்பதாரர்களுக்கான மதிப்பெண்ணுடன் கடன் தொகையை நிர்ணயிக்கிறது, வாடிக்கையாளர்கள் மிகக் குறைந்த நேரத்தில் (TAT) விரைவான அனுமதி மற்றும் விநியோகத்தை அனுபவிக்கிறார்கள்.
சிட்டி யூனியன் வங்கி, தங்களது சேவையில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்(AI) மிஷின் லேர்னிங்(ML) மற்றும் ரோபாட்டிக் பயன்பாடு, ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் போன்றவற்றை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருவதில் முன்னணி வகிக்கிறது. இதன் மூலம் CUB வர்த்தகத்திற்கான பல முடிவுகளை முன்கூட்டியே கணிக்கிறது.
சிட்டி யூனியன் வங்கியில் ஆர்பிஏ(RPA) மூலம் பணியாளர்களைக் கொண்டு செய்த வேலைகள் தற்போது மிக விரைவாக துல்லியமாக கணினி மென்பொருள் மூலம் செய்யப்படுகிறது. செயல்முறை செயல்திறனை மேம்படுத்தவும், மாறும் வாடிக்கையாளர் கோரிக்கைகளை பூர்த்தி செய்யவும், செயல்முறை ஆட்டோமேஷனை நெறிப்படுத்தவும் RPA பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
CUB பெருமையுடன் UPI123PAY ஐ அறிமுகப்படுத்தியது. மேலும் UPI 123 Pay இன் செயல்பாட்டை மேம்படுத்த 'Hello UPI' மற்றும் 'Alexa on UPI123Pay' ஆகிய இரண்டு புதுமையான தீர்வுகளை அறிமுகப்படுத்தியது. மேலும் , வங்கியின் எந்த தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான சேவையும் CUB இல் கிடைக்கும் என்ற நீண்ட பட்டியல் அளித்த சங்கரன் அவர்களிடம் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் எந்த அளவிற்கு பாதுகாப்பு தன்மை உள்ளது மற்றும் வாடிக்கையாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என கேட்டபோது....
வங்கிகள் போதுமான பாதுகாப்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்தினாலும் வாடிக்கையாளர்கள் அவற்றை சரியாக உபயோகப்படுத்தும் பொழுதே அந்த பாதுகாப்பு சிறப்பாக அமைகிறது உதாரணமாக உங்களுக்கென்று பிரத்தியேகமாக கொடுக்கப்படும் ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான PIN, நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் உபயோகப்படுத்துவதற்கான யூசர் ஐடி (User ID), பாஸ்வேர்ட் (Password) போன்றவை உங்கள் உபயோகத்திற்காக அளிக்கப்படுகிறது. ஆனால் இதை நீங்கள் மற்றவர்களிடம் கூறினால் உங்கள் பாதுகாப்பு எப்படி நீடிக்கும்? எந்த காரணத்தை முன்னிட்டும் ஏடிஎம் டெபிட் கார்ட் PIN மற்றும் யூசர் ஐடி பாஸ்வேர்ட் போன்றவற்றை மற்றவருக்கு சொல்லக்கூடாது. யாராவது உங்களது ஆசையை தூண்டும் வகையில் பேசி உங்களுடைய கடவுச்சொல்(PASSWORD), ஓடிபி(OTP) போன்ற விவரங்களை கேட்டால் எந்த வகையிலும் இவர்களுக்கு எந்த தகவலையும் தரக்கூடாது. நாங்கள் நேரடியாக வங்கியை தொடர்பு கொள்கிறோம் என கூறி தொலைபேசியை துண்டித்து விடுவதே நல்லது.
நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் உபயோகப்படுத்துபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் உபயோகப்படுத்துகிற இணையதள பக்கம் குறிப்பிட்ட வங்கியின் இணையதளம் தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். காரணம், போலியான இணையதளங்கள் மூலம் மோசடிக்காரர்கள் உங்களது விவரங்களை சேகரித்துக் கொண்டு அதன் மூலம் உங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து விடுவார்கள். அடுத்ததாக உங்களது கிரெடிட் கார்ட், டெபிட் கார்டுகளில் பின் நம்பரை எழுதி வைப்பதாலும், உங்களது மணி பர்சில் மேற்படி தகவலின் குறிப்பை வைத்திருப்பதாலும் அது தவறானவர்கள் கையில் சிக்கினால் அதை உபயோகித்து உங்கள் பணத்தை வங்கியில் இருந்து எடுத்து விடுவார்கள். உங்களுக்கு ஒரு ஓடிபி வரும் அதை எங்களுக்கு ஷேர் செய்யுங்கள் என கேட்பார்கள். நீங்கள் அதை கூறியவுடன் அடுத்த சில வினாடிகளில் உங்கள் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து விடுவார்கள். ஓடிபி பயன்பாட்டின் முக்கியத்துவமே பாதுகாப்பிற்காக தான். எனவே அதை வங்கியின் தலைமை அதிகாரி பேசுகிறேன் என்றாலும் கூட தொலைபேசியில் யாருக்குமே அதைக் கூறக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்".
வங்கி தற்போது செயல்படுத்திக் கொண்டிருக்கும் பாதுகாப்பு அம்சங்களை பற்றி குறிப்பிட்டு சொல்லுங்களேன் என்ற போது...
எங்களது வங்கியில் பரிவர்த்தனை செய்யும் போது கூடுதல் பாதுகாப்பை கருதி இரண்டு அடுக்கு காரணி செயல்படுத்தப்படுகிறது. அதாவது இணையதளம் மூலமோ கைபேசி மூலமோ வங்கி பரிவர்த்தனையை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் போது குறிப்பிட்ட உள் நுழைவு நேரம் நிர்ணயிக்கப்படுகிறது. அதற்கு மேல் பயனாளர் செயல்படும்போது டபுள் ஃபேக்டர் அதாவது இரண்டு காரணி அங்கீகாரம் கேட்கப்படும். அவற்றை சரிபார்த்த பின் உள் நுழைவு அனுமதிக்கப்படுகிறது. மேலும் தவறான உள்நுழைவு நிகழும் போது எஸ்எம்எஸ் மூலம் உங்களுக்கு தெரிவிக்கப்படும். ஐந்து முறை தவறான கடவுச் சொல்லோடு உள்நுழையும் போது யூசர் ஐடி லாக் (Lock) செய்யப்படும்.
நீங்கள் மொபைல் போனின் மூலம் வங்கி பரிவர்த்தனையும் செய்வீர்கள் என்றால் நீங்கள் வங்கியில் பதிவு செய்த தொலைபேசி எண் மற்றும் நீங்கள் உபயோகப்படுத்துகிற குறிப்பிட்ட மொபைல் போன் கருவயிலிருந்து மட்டுமே வங்கிப் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும். இதுவும் ஒரு கூடுதல் பாதுகாப்பு.மேலும் ஸ்கிரீன் ஷாட் கட்டுப்பாடு, கைபேசியில் ரிமோட் ஆப் நிறுவலை அடையாளம் காணுதல் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் மொபைல் பேங்கிங்கிற்கு கிடைக்கின்றன.
இணையதள பரிவர்த்தனையின் போது உள்நுழைவிற்கான கடவுச்சொல்லும் பரிவர்த்தனைக்கான கடவுச்சொல்லும் வேறு வேறு ஆனது மற்றும் டிஜிட்டல் கையொப்பமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றுடன் பரிவர்த்தனை ஒப்புதலுக்கான டோக்கனையும் அறிமுகப்படுத்தி இருப்பது மேலும் சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது. வாடிக்கையாளர்கள் வங்கியில் தாங்கள் செய்யக்கூடிய பரிவர்த்தனையின் வரம்பையும் இணையதளத்தில் பரிவர்த்தனை செய்யும் போது அதற்கான வரம்பையும் தாங்களாகவே நிர்ணயித்துக் கொள்ள முடியும். புதிதாக பயனாளி ஒருவரை நாம் சேர்க்கும் பொழுது கால அவகாச நடைமுறை பின்பற்றப்படுகிறது. நம்முடைய ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டு தொலைந்து போனால் உடனடியாக பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணில் இருந்து எஸ்எம்எஸ் அனுப்பினால் உடனடியாக மொபைல் பேங்கிங் பரிவர்த்தனை/ கடன்அட்டை/ ஏடிஎம் கார்டு பரிவர்த்தனை தடுக்கப்படும்.
உள்நுழைவுக்கான மொபைல் பின்னுடன் கூடுதலாக, பயோமெட்ரிக், ஃபேஸ் ஐடி மற்றும் வாய்ஸ் பயோமெட்ரிக் போன்ற கூடுதல் அங்கீகாரம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் நெட்பேங்கிங் அடாப்டிவ் அங்கீகாரம் கிடைக்கிறது. பாதுகாப்பான ஆண்ட்ராய்டு மற்றும் iOS எடிஷன்களில்(EDITION) மட்டுமே மொபைல் பயன்பாட்டை நிறுவ முடியும் மற்றும் பழைய எடிஷங்களில் நிறுவ தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், CUB மொபைல் பயன்பாட்டின் சமீபத்திய எடிஷன் புதுப்பித்தலுக்கு(UPDATE) செயல்படுத்தப்படும். வாடிக்கையாளர் சுயவிவரம் தொடர்பான எந்த மாற்றத்திற்கும் SMS விழிப்பூட்டல்கள் அனுப்பப்படும்", என கூறி முடித்தார் சங்கரன் அவர்கள்.