மலபார் குழுமம் 'பசி இல்லாத உலகம்' திட்டத்தை விரிவாக்கம் செய்கிறது: ஒவ்வொரு நாளும் 51,000 உணவு பாக்கெட்டுகளை விநியோகிக்கிறது
விரிவாக்கம் செய்வதன் ஒரு பகுதியாக, 51,000 உ ணவு பாக்கெட்டுகள் இனி விநியோகிக்கப்படும். மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டலம் சார்பாக துவக்க விழா சென்னை அண்ணா நகர் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் கிளையில் நடைபெற்றது.;
சென்னை.மே-28. தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் பசியில் வாடும் ஏழைகளுக்கு சத்தான தினசரி உணவை வழங்கும் மலபார் குழுமத்தின் 'பசி இல்லாத உலகம்' என்ற கார்ப்பரேட் சமூக பொறுப்பு (CSR) திட்டமானது, அதிக அளவிலான மக்களையும் நகரங்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவாக்கப்பட உள்ளது. தற்போது, ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்கு இரண்டிலிருந்து பூஜ்ஜியத்துக்கு (2 & 0) கொண்டு பட்டினியில் வாடுவோர் யாருமில்லை என்ற இலக்கிற்கு ஆதரவளிக்கும் விதத்தில் தொடங்கப்பட்ட இந்த லட்சிய திட்டத்தின் கீழ் 31,000 உணவு பாக்கெட்டுகள் தினமும் விநியோகிக்கப்படுகின்றன.
விரிவாக்கம் செய்வதன் ஒரு பகுதியாக, 51,000 உ ணவு பாக்கெட்டுகள் இனி விநியோகிக்கப்படும். மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டலம் சார்பாக இன்று துவக்க விழா சென்னை அண்ணா நகர் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் கிளையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு. இ. பத்மநாபன் அவர்கள், மதிப்பிற்குரிய முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு.எஸ்.கே. கிருஷ்ணன் அவர்கள். மற்றும் மதிப்பிற்குரிய சென்னை அண்ணாநகர் சட்ட மன்ற உறுப்பினர் திரு. M. K மோகன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.இவர்களுடன் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல தலைவர் திரு.யாசர் மற்றும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு வடக்கு மண்டல தலைவர் திரு. அமீர் பாபு ஆகியோர் உள்ளனர்.
தற்போது, வளைகுடா நாடுகளில் உள்ள சில மையங்களிலும், யூனியன் பிரதேசங்கள் உட்பட 16 மாநிலங்களில் அமைந்துள்ள 37 நகரங்களிலும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, இந்த திட்டம் இப்போது 16 மாநிலங்களில் உள்ள 70 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும். மேலும், உலகின் மிகப்பெரிய அளவிலான தங்க சுரங்கத்திற்கு பெயர் பெற்ற ஆப்பிரிக்க நாடான சாம்பியாவில் பள்ளி குழந்தைகளுக்கும் இதே திட்டத்தைத் தொடங்க இந்த குழு திட்டமிட்டுள்ளது. ''ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு வேளை உணவைப் பெற போராடும் ஏராளமான மக்கள் நம்மைச் சுற்றி இன்னும் உள்ளனர். நம் உலகத்திலிருந்து பசியை அகற்ற கடுமையாக உழைக்கும் அரசாங்கங்களுக்கும் முகமைகளுக்கும் ஒரு சிறிய உதவியாக இந்த திட்டத்தை நாங்கள் தொடங்கினோம்,'' என்று எம்.பி.அகமது கூறினார்.
மிகவும் பிரபலமான சமூக தொண்டாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனமான 'தனல் & தயா ரீஹபிலிட்டேஷன் டிரஸ்ட்' - ன் (Thanal - Daya Rehabilitation Trust)) உதவியுடன் 'பசி இல்லாத உலகம்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு சுகாதாரமான சூழலில் திறமையான சமையல்காரர்களால் சத்தான உணவைத் தயாரிக்க நவீன சமையலறைகள் வெவ்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மலபார் குழுமம் மற்றும் தனல்-ன் தன்னார்வலர்கள் தெருக்களிலும் நகர்ப்புற புறநகர்ப் பகுதிகளிலும் தேவைப்படும் மக்களை அடையாளம் கண்டு உணவு பாக்கெட்டுகளை அவர்களுடைய வீடுகளுக்கே சென்று விநியோகிக்கிறார்கள்.
பசியின் சமூக மற்றும் பொருளாதார காரணங்களை மதிப்பிடுவதற்கு பயனாளிகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆய்வு செய்கின்றன. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, தனாலுடன் இணைந்து மலபார் குழுமம், ஏழை மற்றும் அனாதை வயதான பெண்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இலவச உணவு, தங்குமிடம் மற்றும் பிற சுகாதாரப் பாதுகாப்பை வழங்குவதற்கான சூகிராண்ட்மா ஹோம்' திட்டத்தைத் தொடங்கியுள்ளது. பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் இதுபோன்ற இரண்டு சூகிராண்ட்மா ஹோம்கள்' அமைக்கப்பட்டுள்ளன. சென்னை, கொல்கத்தா, டெல்லி, மும்பை மற்றும் கேரளாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் இதேபோன்ற வீடுகளை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. புறக்கணிக்கப்பட்ட மற்றும் அனாதை பெண்கள் கண்ணியத்துடன் வாழ இது ஒரு வாய்ப்பை வழங்கும். தெருவோரக் குழந்தைகளின் ஆரம்பக் கல்வியை ஆதரிப்பதற்காக இந்த குழுமம் நுண் கற்றல் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தவிர, மலபார் குழுமம் பிற சமூக நலன் மற்றும் மருத்துவ பராமரிப்புக்கான நிதி உதவி, மாணவிகளுக்கு கல்வி ஆதரவு மற்றும் வீடு கட்டுமானத்திற்கான பகுதி ஆதரவு போன்ற தொண்டு நடவடிக்கைகளிலும் தீவிரமாக உள்ளது. மலபார் கோல்டு & டைண்ட்ஸ் உட்பட தன்னுடைய நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் லாபத்தில் ஐந்து விழுக்காட்டினை குழுமம் சமூக நலப்பணிகளுக்கான ஒரு கூட்டாண்மை சமூகப் பொறுப்பு (CSR) நிதியாக ஒதுக்குகிறது. இதுபோன்ற சமூக நலத் திட்டங்களுக்காக இந்த குழுமம் ஏற்கனவே ரூ. 246/- கோடி செலவிட்டுள்ளது.
தொடர்புக்கு: 9344177788