இன்றைய பஞ்சாங்கம்
குரோதி வருடம் வைகாசி மாதம் 9-ம் தேதி புதன்கிழமை
நட்சத்திரம் : இன்று காலை 8.17 வரை சுவாதி பின்பு விசாகம்
திதி : இன்று மாலை 7.13 வரை சதுர்தசி பின்பு பௌர்ணமி
யோகம் : சித்த யோகம்
நல்ல நேரம் காலை : 9.30 - 10.30
நல்ல நேரம் மாலை : 4.30 - 5.30
ராகு காலம் பிற்பகல் : 12.00 - 1.30
எமகண்டம் காலை : 7.30 - 9.00
குளிகை காலை : 10.30 - 12.00
கௌரி நல்ல நேரம் காலை : 10.30 - 11.30
கௌரி நல்ல நேரம் மாலை : 6.30 - 7.30
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி
ராசிபலன்
மேஷம்
சகோதரர்களின் உதவி கிடைக்கும். பெண்கள் சுய தொழில்களில் முதலீட்டினை மேற்கொள்வர். மாணவர்கள் பகுதி நேர தொழில்நுட்பப் பயிற்சியில் சேருவர். தாய்வீட்டு உறவினர்களின் வருகை உண்டு. விவசாயிகளுக்கு எதிர்பார்த்ததை விட மகசூல் அதிகரிக்கும். அதிகப் பயணங்களால் லாபம் கூடும்.
அதிர்ஷ்டநிறம் : பச்சை
ரிஷபம்
வியாபாரத்தில் உள்ளவர்கள் பழைய சரக்குகளை விற்று விடுவீர்கள். தம்பதிகள் பொறுப்புணர்வர். வீடு வாங்க கேட்ட வங்கிக் கடன் வந்தடையும். மாணவர்கள் படிப்பு மட்டுமல்லாமல் கலைத்துறையிலும் ஈடுபாடு கொள்வர். அண்டை வீட்டாரிடம் நட்பு பலப்படும். பணம் பாக்கெட்டை நிரப்பும்.
அதிர்ஷ்டநிறம் : ரோஸ்
மிதுனம்
பெற்றோர் நலனில் அக்கறை காட்டி வருவீர்கள். பெண்கள் புது ரக ஆடைகளை வாங்கி இன்புறுவர். உடல் நலம் சீராக இருக்கும். வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள் மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். பங்கு சந்தையில் சில மாற்றங்கள் செய்வீர்கள்.
அதிர்ஷ்டநிறம் : ஊதா
கடகம்
நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கல் சீராகச் செல்லும். அரசியல்வாதிகளின் எண்ணம் ஈடேறும். திருமணமாகாதவர்களுக்கு ஏற்ற துணை கிடைக்கும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கட்டளையினை ஏற்பர். கூட்டு வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும்.
அதிர்ஷ்டநிறம் : சாம்பல்
சிம்மம்
இளைஞர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். உறவினர்கள் வருகை இன்பமளிக்கும். வியாபாரிகளுக்கு தள்ளுபடியால் விற்பனை கூடும். உயர் கல்விக்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல திட்டமிடுவீர்கள். மகளுக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுப்பர்.
அதிர்ஷ்டநிறம் : வெள்ளை
கன்னி
சில்லரை வியாபாரிகள் லாபமடைவர். பிள்ளைகள் நல் வழியில் செல்வர். உத்யோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். ஆசிரியருக்கு பாராட்டுகள் குவியும். பெண்களுக்கு தாங்கள் எதிர்பார்த்த வரன் அமையும். தேகம் பளிச்சிடும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.
அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்
துலாம்
கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தம்பதிகளிடையே அன்பு மிகும். நண்பர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவர். பிரிந்த நண்பர்கள் அன்பு பாராட்டுவீர்கள். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நன்மதிப்பைப் பெறுவர். பெற்றோரின் உடல் நலத்தை கவனிப்பது நல்லது.
அதிர்ஷ்டநிறம் : பச்சை
விருச்சிகம்
பிள்ளைகளின் எண்ணத்தை ஈடேற்றுவீர்கள். பயணத்தின் போது எச்சரிக்கை தேவை. வெளிநாட்டில் வசிப்பவர்கள் தங்களுக்கு உதவுவர். திடீர் பணவரவு ஆனந்தத்தைத் தரும். திருமண பேச்சுவார்த்தைகள் இனிதே முடியும். உடல் நலம் சிறப்படையும்.
அதிர்ஷ்டநிறம் : சிவப்பு
தனுசு
பெற்றோரின் ஆசையினை பூர்த்தி செய்வீர்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. உத்யோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாடு சுற்றுப்பயணம் நேரலாம். முன்கோபத்தினை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்டநிறம் : நீலம்
மகரம்
வியாபாரிகள் புதிய கிளைகளை துவங்குவர். பிள்ளைகள் நன்கு படிப்பர். நினைத்த இடத்திற்கு, பார்க்க வேண்டிய நபர்களை சந்தித்து, நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அக்கம் பக்கத்தாருடன் அனுசரனையுடன் செல்லுங்கள். தம்பதிகளிடையே மனஸ்தாபம் நேரலாம்.
அதிர்ஷ்டநிறம் : ரோஸ்
கும்பம்
புதிய வாடிக்கையாளர்களின் வருகை மனதிற்கு தெம்பளிக்கும். மாணவர்ளின் தேவைகளை தங்களின் பெற்றோர்கள் பூர்த்தி செய்வர். அரசு வேலைகள் சாதகமாகும். உத்யோகத்தில் தங்களுக்கெதிராக செயல்பட்ட அதிகாரி இடமாற்றம் செய்யப்படுவார்.
அதிர்ஷ்டநிறம் : பச்சை
மீனம்
இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டநிறம் : கிரே