இன்றைய ராசிபலன் - 28.07.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்;

Update: 2024-07-28 01:13 GMT

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஆடி மாதம் 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை

நட்சத்திரம் : இன்று பிற்பகல் 03.58 வரை அஸ்வினி பின்பு பரணி.

திதி : இன்று அதிகாலை 1.25 வரை அஷ்டமி பின்பு நவமி

யோகம் : சித்த யோகம்

நல்ல நேரம் காலை : 07.45 - 08.45

நல்ல நேரம் மாலை : 03.15 - 4.15

ராகு காலம் மாலை : 04.30 - 6.00

எமகண்டம் மாலை : 12.00 - 1.30

குளிகை மாலை : 03.00 - 4.30

கௌரி நல்ல நேரம் காலை : 10.45 - 11.45

கௌரி நல்ல நேரம் மாலை : 1.30 - 2.30

சூலம் : மேற்கு

சந்திராஷ்டமம் : மகம், பூரம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்

வரி ஏய்ப்பு செய்யாமல் வரிகள் சம்பந்தப்பட்ட அரசாங்க விஷயங்களை முடித்து விடுவீர்கள். சைனஸ் பிரச்சினை ஆரம்பமாகும். ஆதலால், உடல் நிலையில் கவனம் கொள்வது அவசியம். வியாபாரத்தில் தாங்கள் நினைத்த அளவிற்கு விற்பனை செய்து விடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

ரிஷபம்

உத்யோகத்தில் அலுவலகத்தில் உங்களுக்கென்று சில பொறுப்புகள் அதிகரிக்கும். வாகனத்திற்கு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உடற்பயிற்சியில் ஆர்வம் மிகும். யோகா மற்றும் ஜிம் போன்றவைகளில் இணைவர். வியாபாரத்தில் லாபம் கூடும்.

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மிதுனம்

நீண்ட காலமாக பிரிந்திருந்த தம்பதிகள் சமரசமாக செல்வர். பங்குச் சந்தையில் ஒரு குறிப்பிட்ட பணம் முதலீடு செய்வீர். கல்வியில் ஆர்வம் மிகும். ஒரு சிலர் அஞ்சலக கல்வி மூலமாக கல்வி கற்பர். குடும்பத் தலைவிகள் வரவுக்கேற்ப செலவு செய்வர்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கடகம்

நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை சம்பந்தப்பட்ட விசயத்தில் நல்லதொரு நம்பிக்கைக்குண்டான விசயம் நிகழும். பெண்கள் சிக்கனம் கொள்வது அவசியம். அத்யாவசிய தேவைகளை மட்டும் பூர்த்திச் செய்து கொள்வர்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

சிம்மம்

இன்று உத்திரம் நட்சத்திரக்காரர்கள் தங்களுடைய அனைத்துவிதமான காரியங்களை துவங்கலாம். ஆனால், மகம், பூரம்நட்சத்திரக்காரர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். மேலும், தாங்கள் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கன்னி

தம்பதிகள் இணைந்து செயல்படுவர். பூர்வ சொத்தில் தங்கள் பங்கு கிடைக்கும். வழக்கு இன்னும் முடிவுறாமல் இழுத்தடிக்கும். வயிறு உபாதை வந்து போகும். பணவரவு நன்றாக இருக்கும். வாகனத்தில் கவனம் தேவை. வெளியூர் செய்தி ஆறுதல் தரும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்

துலாம்

வெளியூரில் உள்ள வழக்காடு மன்றத்தில் தங்களுக்குச் சம்பந்தமான வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் பிரச்சினைகளை புரிந்து கொள்வர். பிள்ளைகளால் சிறு பிரச்சனைகள் வந்து நீங்கும். தம்பதிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

விருச்சிகம்

உத்யோகஸ்தர்கள் சகஊழியர்களிடம் அனுசரிப்பது நல்லது. குடும்பத் தலைவிகள் வீட்டில் உள்ள தேவையான ஆவணங்களை பாதுகாப்பீர்கள். வியாபாரம் லாபகரமாக இருக்கும். பிள்ளைகளின் செயல்களில் கவனம் கொள்வதால் அவர்களின் எதிர்கால வாழ்வு பிரகாசமடையும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

தனுசு

உத்யோகஸ்தர்கள் சுயமரியாதையுடன் நடத்தப்படுவர். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நினைத்த பதவி கிடைக்கும். மாமியார் மருமகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து முடிப்பர்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மகரம்

அரசியலில் இருப்போருக்கு பொறுப்புகள் தேடி வரும். பெற்றோரின் விருப்பம் நிறைவேறும். உத்யோகத்தில் வேலையில் ஆர்வம் அதிகமுண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டில் நிம்மதி பிறக்கும். தம்பதிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். எதிர்பார்த்த பணவரவு வரும்.

அதிர்ஷ்ட நிறம் : கருப்பு

கும்பம்

நண்பர்கள் தங்களிடம் அன்புடன் நடந்து கொள்வர். தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்தவரை சந்திப்பீர்கள். தங்கள் சொல்படி வேலையாட்கள் கீழ்படிவர். பிள்ளைகள் தங்களை புரிந்து கொள்வர்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மீனம்

திருமணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். உடன்பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். உத்யோகஸ்தரின் வேலை பளு காரணத்தால் தங்களின் பணிகளை தள்ளிப்போடுவீர்கள். தம்பதிகள் ஒற்றுமையுடன் இருப்பர்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

Tags:    

மேலும் செய்திகள்