இன்றைய ராசிபலன் - 03.08.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

Update: 2024-08-03 01:28 GMT

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஆடி மாதம் 18-ம் தேதி சனிக்கிழமை

நட்சத்திரம் : இன்று பிற்பகல் 1.42 வரை புனர்பூசம் பின்பு பூசம்.

திதி : இன்று பிற்பகல் 04.55 வரை சதுர்த்தசி பின்பு அமாவாசை

யோகம் : சித்த யோகம்

நல்ல நேரம் காலை : 07.45 - 08.45

நல்ல நேரம் மாலை : 4.45 - 5.45

ராகு காலம் காலை : 9.00 - 10.30

எமகண்டம் மாலை : 1.30 - 3.00

குளிகை காலை : 6.00 - 7.30

கௌரி நல்ல நேரம் காலை : 10.45 - 11.45

கௌரி நல்ல நேரம் மாலை : 9.30 - 10.30

சூலம் : கிழக்கு

சந்திராஷ்டமம் : விசாகம், அனுஷம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்

விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். காதல் கசக்கும். நினைத்த காரியம் வெற்றி பெறும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த ஒரு நற்செய்தி வரும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

ரிசபம்

சிறு வியாபாரிகளுக்கு விற்பனை மிகும். பெரிய விசயங்கள் சட்டென்று முடியும். மார்கெட்டிங்பிரிவினர் அதிக ஆர்டர்கள் பெறுவர். வாகன பராமரிப்பு செலவு ஏற்படும். வெளியூர் பயணம் வெற்றி தரும். உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

மிதுனம்

கணினி துறையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவர். வியாபாரம் செழிப்புறும். உடல் நலம் சிறக்கும். பிள்ளைகள் பெற்றோர்களின் ஆதரவுடன் முன்னேறுவர். மகிழ்ச்சி பொங்கும். அழகு நிலையங்கள் வருவாயை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

கடகம்

பெண்கள் வீட்டுச்செலவினை சமாளிப்பர். கணவன், மனைவி ஒற்றுமை இருப்பர். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். தாய்வழி உறவினர்களிடம் மதிப்பு, மரியாதைக் கூடும். உடல்நிலையில் சிறுபாதிப்பு ஏற்பட்டு விலகும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

சிம்மம்

பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை. தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

கன்னி

கெட்ட நண்பர்களை ஒதுக்குவீர்கள். அரைகுறையாக நின்ற விஷயங்கள் உடனே முடியும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். கல்யாணம், கிரகப் பிரவேசத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும். வாராப் பணம் வரும்.

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

துலாம்

விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். சிலருக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். பிள்ளைகள் தங்கள் சந்தேகங்களை பெற்றோரிடம் போக்கிக் கொள்வர். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

விருச்சிகம்

விசாகம், அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு தேவையற்ற மனக் குழப்பங்கள் மற்றும் சங்கடங்கள் தோன்றலாம். மிகவும் கவனம் தேவை. காரணம் சந்திராஷ்டமம் உள்ளதால் மிகவும் கவனம்தேவை. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். இறைவனை வழிப்பட்டு காரியத்தை துவங்கவும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

தனுசு

பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வரும். வழக்கில் திருப்பம் ஏற்படும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். கை, கால் வலி வந்துப் போகும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு.

அதிர்ஷ்ட நிறம் : வான்நீலம்

மகரம்

தங்கள் பிள்ளைகள் தங்கள் சொல் பேச்சை கேட்டு நடப்பர். நீண்ட நாளாக முடிக்க வேண்டிய காரியங்களை முடித்துக் காட்வீர்கள். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

கும்பம்

நண்பர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். திடீர் பயணங்கள் வந்துப் போகும்.ஒரு சிலர் நவீன வாகனம் வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : கிளிப்பச்சை

மீனம்

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மதிப்பார்கள். மாணவர்கள் காதலில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்து கொள்வது நல்லது. குடும்பத்துடன் வெளிநாடு சுற்றிப் பார்க்க திட்டமிடுவர். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் பதக்கம் பெற்று தாய்நாடு திரும்புவர்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

Tags:    

மேலும் செய்திகள்