பிரெஞ்சு ஓபன் : கார்லோஸ் அல்கராஸ் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
2-வது சுற்றில் கார்லோஸ் சக நாட்டு வீரரான ராமோஸ் வினோலாசை எதிர் கொள்கிறார்.
பாரிஸ்,
ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது.
நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் முன்னணி வீரரான டோமினிக் திம் (ஆஸ்திரியா) அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
அதே போல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஸ்பெயின் நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ் 6-4, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் அதிர்ஷ்டசாலி ஜுவான் இக்னாசியோ லண்டெரோவை வீழ்த்தி பிரெஞ்சு ஓபனின் 2-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
நாளை மறுதினம் நடைபெறும் 2-வது சுற்றில் இவர் சக நாட்டு வீரரான ராமோஸ் வினோலாஸ்-சை எதிர் கொள்கிறார்.